கல்வீடு கட்டும் திட்டத்திற்கு மீண்டும் காமராஜர் பெயர்

Added : ஆக 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில், கல்வீடு கட்டும் திட்டத்திற்கு மீண்டும் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என தி.மு.க., எம்.எல்.ஏ., பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:அசோக்பாபு (பா.ஜ.,): புதுச்சேரி மாநிலத்தில் தளம்போட்ட வீட்டை இலவசமாக பட்டா மறுபெயர்

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில், கல்வீடு கட்டும் திட்டத்திற்கு மீண்டும் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என தி.மு.க., எம்.எல்.ஏ., பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:அசோக்பாபு (பா.ஜ.,): புதுச்சேரி மாநிலத்தில் தளம்போட்ட வீட்டை இலவசமாக பட்டா மறுபெயர் மாற்றம் செய்துதர அரசுக்கு எண்ணம் உள்ளதா. புறம்போக்கு நிலத்தில் கட்டிய வீட்டிற்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா.

முதல்வர் ரங்கசாமி: புறம்போக்கு நிலத்தில் வீட்டு மனைகளில் உள்ள தளம்போட்ட கட்டடங்களை மறு ஒதுக்கீடு செய்ய வழிகாட்டி மதிப்பு மூலம் வழங்கப்படுகிறது. கடந்த 1975ம் ஆண்டு, நிலமானிய விதிகளின்படி, எந்த தளம் போட்ட வீட்டு கட்டடங்களும் இலவசமாக மறு ஒதுக்கீடு செய்வதில்லை.அப்போது குறுக்கிட்ட சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் நேரு, பி.ஆர்.சிவா, சிவசங்கர் ஆகியோர், 'இலவச பட்டாவை மறுபெயர் மாற்றம் செய்ய வேண்டும்' என்றனர்.

முதல்வர்: வீடற்ற ஏழைகள் குடியிருக்க இலவச மனைப்பட்டா வழங்கினோம். கல்வீடு கட்டவும் நிதியுதவி அளிக்கப்படுகிறது. அப்படி கிடைத்த வீடுகளை விற்றுள்ளனர்.அதனை ரூ.15 முதல் 30 லட்சம் வரை பணம் கொடுத்து வாங்குகின்றனர். அவர்கள் ஏழையா. அவர்கள் அரசு வழிகாட்டி மதிப்பீட்டின்படி, வரி செலுத்தி பத்திரம் பதிய கூறுகிறோம். அரசு வழங்கிய வீட்டை விற்றவர்கள் மீண்டும் வீடு கோரி விண்ணப்பிப்பர். இந்த வீடுகளை வாங்கியோரை ஏழைகளாக கருத முடியாது.

செந்தில்குமார் (தி.மு.க.,): கல்வீடு கட்டும் திட்டம் காமராஜர் பெயரில் இருந்தது. தற்போது இத்திட்டத்தை பிரதம மந்திரி ஆவாஜ் யோஜனா என பெயர் மாற்றிவிட்டனர். மத்திய அரசு ரூ.1.5 லட்சம் வழங்குகிறது. மாநில அரசு இதற்கு ரூ. 2 லட்சம் முதல் 3 லட்சம் வழங்குகிறது.மாநில அரசின் நிதியுதவியில் வீடு கட்டும் திட்டத்திற்கு மீண்டும் காமராஜர் பெயர் வைக்க வேண்டும். அல்லது முதல்வர் வீடு கட்டும் திட்டம் என பெயர் வைக்க வேண்டும்.

அதற்கு, பா.ஜ., கல்யாணசுந்தரம், ஜான்குமார், வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு, ரிச்சர்ட் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.அவர்களுக்கு, தி.மு.க., நாஜிம், சிவா, அனிபால் கென்னடி ஆகியோர் பதில் அளித்து பேசியதால், சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.

சபாநாயகர்:கடந்த ஆட்சியில் கல்வீடு கட்ட நிதியே தரவில்லை. முதல்வர் ரங்கசாமி பொறுப்பேற்ற பின் தான், நிதி வழங்கப்படுகிறது. மேலும், ஒரே திட்டத்திற்கு இரு பெயர் வைக்க முடியாது.அமைச்சர் சாய் சரவணன்குமார்: மத்திய அரசு நிதி வழங்குவதால், பிரதம மந்திரி ஆவாஜ் யோஜனா என்றே பெயர் தொடர வேண்டும்.

அமைச்சர் நமச்சிவாயம் : இத்திட்டத்தின் பெயரை இந்த அரசு மாற்றவில்லை. கடந்த ஆட்சியில், அப்போதைய முதல்வர் நாராயணசாமிதான் மாற்றினார். அந்த ஆட்சியில் நீங்கள் (தி.மு.க.,வும்) கூட்டணியில் இருந்தீர்கள்.

சிவா (தி.மு.க.,): கடந்த ஆட்சி அமைச்சரவையில் நீங்களும் தான் இடம் பெற்றிருந்தீர்கள்.இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சபையில் பரபரப்பு நிலவியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X