கடலில் படகு இன்ஜின் பழுதாகி தத்தளித்த 7 மீனவர்கள் மீட்பு

Added : ஆக 24, 2022 | |
Advertisement
காரைக்கால் : நடுக்கடலில் படகு இன்ஜின் பழுதாகி தத்தளித்த காரைக்கால் மீனவர்கள் 7 பேரை கடலோர காவல் படையினர் மீட்டனர்.காரைக்கால்மேடு கிருஷ்ணமூர்த்தி, 30, என்பவரின் பைபர் படகில், அதே பகுதி வேலுச்சாமி(55), செந்தில் (38), பாலாஜி(36), முருகானந்தம், கீழகாசாகுடி ராஜ்குமார்(30), ராமசாமி(50) ஆகிய ஏழு மீனவர்கள் கடந்த 18ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் கரை

காரைக்கால் : நடுக்கடலில் படகு இன்ஜின் பழுதாகி தத்தளித்த காரைக்கால் மீனவர்கள் 7 பேரை கடலோர காவல் படையினர் மீட்டனர்.

காரைக்கால்மேடு கிருஷ்ணமூர்த்தி, 30, என்பவரின் பைபர் படகில், அதே பகுதி வேலுச்சாமி(55), செந்தில் (38), பாலாஜி(36), முருகானந்தம், கீழகாசாகுடி ராஜ்குமார்(30), ராமசாமி(50) ஆகிய ஏழு மீனவர்கள் கடந்த 18ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் கரை திரும்பியிருக்க வேண்டும். கரைதிரும்பாததால், மீனவ பஞ்சாயத்தார் கடலோர காவல் நிலையத்தில் தெரிவித்தனர்.இந்திய கடலோர காவல்படை உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கோடியக்கரை தென்கிழக்கில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு இன்ஜின் பழுதடைந்ததால், கரை திரும்ப முடியாமல் நடுக்கடலில் தத்தளித்தனர். கடலுக்கு சென்ற நாகை மீனவர்கள் இதைப் பார்த்து, தகவல் அளித்தனர். அதையடுத்து கடலோர காவல் படையினர் சென்று 7 மீனவர்களை படகுடன் மீட்டு நேற்று காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்து மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


அமைச்சர் அறிவிப்பு


மீனவர்கள் மீட்கப்பட்டது குறித்த தகவலை, நேற்று புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின் போது மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அறிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X