ஆட்டுப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு : முதல்வர் உறுதி

Added : ஆக 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி ஆட்டுப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி கூறினார்.சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:கென்னடி (தி.மு.க.): ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உப்பளம் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் எத்தனை, ஆட்டுப்பட்டி பகுதியில் குடியிருப்பு கட்ட இத்திட்டத்தில் எவ்வளவு நிதி

புதுச்சேரி : புதுச்சேரி ஆட்டுப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி கூறினார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:கென்னடி (தி.மு.க.): ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உப்பளம் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் எத்தனை, ஆட்டுப்பட்டி பகுதியில் குடியிருப்பு கட்ட இத்திட்டத்தில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது, சம்பந்தப்பட்ட அரசு துறையில் தடை இல்லா சான்று பெறப்பட்டுள்ளதா, எப்போது பணிகள் துவங்கப்படும்.

முதல்வர் ரங்கசாமி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உப்பளம் தொகுதியில் 5 பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆட்டுப்பட்டியில் குடியிருப்புகள் கட்ட ரூ. 5 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. தடையில்லா சான்று இன்னும் பெறப்படவில்லை. இடம் கையகப்படுத்தப்பட்ட பின் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணி துவங்கப்படும்.கென்னடி: தடையில்லா சான்று பெறப்பட்டதா என்ற கேள்விக்கு தவறான தகவல் அளித்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருவதாக அரசு ஏற்கனவே உறுதி அளித்தது. அதை நிறைவேற்ற வேண்டும்.

முதல்வர்: குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என்ற எண்ணம் தான் அரசுக்கும் உள்ளது. எல்.ஜி.ஆர். பட்டா பெற்றவர்கள் இதற்கு சம்மதிப்பார்களா என தெரிய வேண்டும். அத்தோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிலம் கையகப்படுத்த முடியாது. நகராட்சி நிலம் என்பதால் நகராட்சிக்கு பணம் கொடுத்து ஆர்ஜிதம் செய்ய வேண்டும். நகராட்சிக்கு வருவாய் வரும் வகையில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி வாடகைக்கு விடலாமா என்ற எண்ணமும் உள்ளது. நிலம் கையகப்படுத்த சுமார் ரூ.12 கோடி தேவைப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சிவா: நகரப் பகுதியில் இது போன்ற இடங்களில் வசிக்கும் மக்கள் கடும் கஷ்டத்தில் உள்ளனர். நீண்ட காலமாக குடியிருப்பு கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. திடீர் நகரில் உள்ள மக்களுக்கும் குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும்.

நேரு, (சுயேச்சை): திடீர் நகர் பகுதி தற்போது பன்றி மேய்க்கும் இடமாகவும், கஞ்சா விற்பனை செய்யும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி உள்ளது. இங்குள்ள மக்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டி தர வேண்டும்.முதல்வர்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நில ஆர்ஜிதம் செய்ய முடியாது. நகராட்சிக்கு சொந்த மான நிலத்தை பணம் கொடுக்காமல் மாற்றவும் முடியாது.

சிவா: தமிழகத்தில் இது போன்ற இடங்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆர்ஜிதம் செய்து வீடு கட்டித் தருகின்றனர்.கென்னடி: அப்பகுதியில் 150 பேருக்கு வீடு தேவை, 200 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வம்பா கீரப்பாளையத்தில் வீடு இன்றி வசிப்பவர்களுக்கும் வீடு அளிக்கலாம்.முதல்வர்: வீடற்ற ஏழை மக்களுக்கு வீடு அளிக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். ஆட்டுப்பட்டி மக்களுக்கு எந்த வகையில் வீடு கட்டித் தரலாம் என ஆலோசித்து முடிவெடுத்து, குடியிருப்பு கட்டி தரப்படும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X