இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு கடலூர் கோர்ட் அதிரடி உத்தரவு

Added : ஆக 24, 2022 | |
Advertisement
கடலுார் : விசாரணைக் கைதி மரணம் தொடர்பாக, இன்ஸ்பெக்டர் ராஜா உள்ளிட்ட மூவர் மீது கொலை வழக்கு பதிய, கடலுார் கோர்ட் உத்தரவிட்டது.கடலுார் மாவட்டம், நெய்வேலியில் கடந்த 2015ல் மும்தாஜ் என்ற பெண், நகைக்காக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்த சுப்ரமணியன், 35; என்பவரை, நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரணைக்காக அழைத்து



கடலுார் : விசாரணைக் கைதி மரணம் தொடர்பாக, இன்ஸ்பெக்டர் ராஜா உள்ளிட்ட மூவர் மீது கொலை வழக்கு பதிய, கடலுார் கோர்ட் உத்தரவிட்டது.கடலுார் மாவட்டம், நெய்வேலியில் கடந்த 2015ல் மும்தாஜ் என்ற பெண், நகைக்காக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்த சுப்ரமணியன், 35; என்பவரை, நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

அவர், போலீஸ் நிலையத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.சுப்ரமணியன் இறப்பை சந்தேக மரண வழக்காக பதிவு செய்து, விசாரணை நடத்தப்பட்டது. 'லாக்அப்' மரணமாக வழக்குப்பதிவு செய்ய மா.கம்யூ., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தின. அதையடுத்து, வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., விசாரணையில், இன்ஸ்பெக்டர் ராஜா, எஸ்.எஸ்.ஐ., செந்தில்வேல், போலீஸ்காரர் சவுமியன் ஆகிய மூவர் மீது, குற்றம் சாட்டப்பட்டு, கொலையாகாத மரணம் என வழக்கு பதிவு செய்து, கடலுார் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த 2018ம் ஆண்டு, வழக்கு நடத்தும் நீதிமன்றமே முகாந்திரம் இருந்தால் கொலை மற்றும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை வழக்காக மாற்றிக் கொள்ளலாம் என, தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை தொடர்ந்து, கடலுார் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு நடந்து வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையில், நீதிபதி உத்தமராஜா உத்தரவு பிறப்பித்தார்.அதில், குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் ராஜா, எஸ்.எஸ்.ஐ., செந்தில்வேல், போலீஸ்காரர் சவுமியன் ஆகியோர் மீதான வழக்கை, கொலை மற்றும் எஸ்சி., எஸ்.டி., வன்கொடுமை பிரிவுகளில் மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தார். இன்ஸ்பெக்டர் ராஜா தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிகிறார்.இதுகுறித்து சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜீவக்குமார் கூறுகையில், 'கொலையாகாத மரணம் என்பது தற்போது கொலையாக மாற்றப்பட்டு அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜா உட்பட மூவர் மீதும், வழக்கு நடைபெறும். அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் இதே நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும். அடுத்தக்கட்ட விசாரணை செப்., 9ல் நடைபெறும்' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X