'காவு' வாங்கும் இருவழிச்சாலை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Added : ஆக 24, 2022 | |
Advertisement
சேலம் - உளுந்துார்பேட்டை- நான்கு வழிச்சாலையில், அகலம் குறைந்த, 8 புறவழிச்சாலைகளால் விபத்துகள் தொடர்கின்றன. அதில் பறிபோகும் உயிரிழப்புகள் குறித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை; ஆளும் அரசும் மவுனம் காக்கிறது.சேலம் - உளுந்துார்பேட்டை- வரை, 136 கி.மீ., சாலை, 2008ல் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கி, 2013ல் நிறைவடைந்தது. உளுந்துார்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம்,



சேலம் - உளுந்துார்பேட்டை- நான்கு வழிச்சாலையில், அகலம் குறைந்த, 8 புறவழிச்சாலைகளால் விபத்துகள் தொடர்கின்றன. அதில் பறிபோகும் உயிரிழப்புகள் குறித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை; ஆளும் அரசும் மவுனம் காக்கிறது.

சேலம் - உளுந்துார்பேட்டை- வரை, 136 கி.மீ., சாலை, 2008ல் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கி, 2013ல் நிறைவடைந்தது. உளுந்துார்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், ஆத்துார், வாழப்பாடி, உடையாப்பட்டி ஆகிய இடங்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. அப்போது, குறைந்த வாகன போக்குவரத்து இருப்பதாக காரணம் காட்டி, புறவழிச்சாலைகள் இரு வழிச்சாலையாக அமைக்கப்பட்டன.சேலம் - உளுந்துார்பேட்டை சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. நான்கு வழிச்சாலைகளில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள், அதே வேகத்தில் அகலம் குறைந்த புறவழிச்சாலையிலும் செல்கின்றனர்.

அச்சாலையில் புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்களால் குழப்பமடைந்து நிலை தடுமாறுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. அபாய வளைவு, மேம்பாலங்கள் உள்ளதால், முந்த முயற்சிக்கும்போது விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழக்கின்றனர். இரு வழிச்சாலை உள்ள புறவழிச்சாலைகளில் மட்டும், குறிப்பாக, இரவில் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன.புறவழிச்சாலை பிரியும் இடங்களில் மின்விளக்கு இல்லாதது, பல இடங்களில் விளக்கு எரியாதது, போதிய வெளிச்சமின்மை, எச்சரிக்கை பலகை, ரிப்ளக்டர் என, வாகன ஓட்டிகளை எச்சரிக்கும்படி ஏதும் இல்லை. உயர்கோபுர மின்விளக்குகளை கூட முறையாக பராமரிப்பது கிடையாது. விதிமீறும் வாகனங்களை கண்டறிய பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களில் பழுதாகி காட்சிப் பொருளாகவே உள்ளன.சேலம் - உளுந்துார்பேட்டை புறவழிச் சாலைகளில், 2018ல், 74 விபத்துகளில், 30 பேர் பலியாகினர். 2019ல்(செப்டம்பர் வரை) 65 விபத்துகளில், 43 பேர் பலியாகினர். 2020ல் புறவழிச்சாலை விபத்துகளால், 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

நேற்று, ஆத்துார் புறவழிச்சாலையில், 8 பேர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டத்தில் நத்தக்கரை, மேட்டுப்பட்டி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாடூர் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதன் நிர்வாகம் உயிரிழப்பை தடுக்க சாலையை அகலப்படுத்தாதது அதிருப்தி அளிக்கிறது. 'நகாய்' உயரதிகாரிகளும் இப்பிரச்னையை கண்டுகொள்ளவில்லை.

சாலை சீரமைப்பு பணிகளை பராமரிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக, அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. தற்போதைய நிலையில், இந்த தடத்தில் வாகன போக்குவரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதை தடுக்க, புறவழிச் சாலைகளை, நான்கு வழிச் சாலையாக உடனே மாற்ற வேண்டும்.இனியும் காலதாமதம் செய்யாமல், சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், ஆளும் அரசும் முன் வர வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X