திருமணம் நிச்சயித்த இளம்பெண் தற்கொலை

Added : ஆக 24, 2022 | |
Advertisement
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த தேவங்குடியைச் சேர்ந்தவர் பிரபு மகள் பரமேஸ்வரி, 18. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமண நிச்சயம் நடந்தது.திருமணம் வரும் 31ம் தேதி நடக்க உள்ள நிலையில், தந்தை பிரபுவிடம் நகைகள் இதுவரை ஏன் எடுக்கவில்லை என, பரமேஸ்வரி



பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த தேவங்குடியைச் சேர்ந்தவர் பிரபு மகள் பரமேஸ்வரி, 18. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமண நிச்சயம் நடந்தது.திருமணம் வரும் 31ம் தேதி நடக்க உள்ள நிலையில், தந்தை பிரபுவிடம் நகைகள் இதுவரை ஏன் எடுக்கவில்லை என, பரமேஸ்வரி கேட்டுள்ளார். அதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது எடுத்து விடுகிறேன் என்றார். மனமுடைந்த பரமேஸ்வரி நேற்று காலை 10:00 மணியளவில் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை உறவினர்கள் சுடுகாட்டிற்கு எடுத்து சென்று எரித்தனர்.தகவலறிந்த தேவங்குடி வி.ஏ.ஓ., தமிழ்தாசன் சம்பவம் குறித்து விசாரித்தார். பின், தகவல் தெரிவிக்காமல் உடலை எரித்ததாகவும், சாவில் சந்தேகம் இருப்பதாக கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X