கனியாமூர் கலவரத்தில் மேலும் 5 பேர் கைது

Added : ஆக 24, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கனியாமூர் பள்ளி கலவரத்தில் மேலும் 5 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பாக கடந்த மாதம் 17ம் தேதி கலவரம் நடந்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்து வருகின்றனர்.அதில், 'வாட்ஸ் ஆப்' குழுவில்
கனியாமூர் கலவரத்தில்  மேலும் 5 பேர் கைது



கள்ளக்குறிச்சி : கனியாமூர் பள்ளி கலவரத்தில் மேலும் 5 பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பாக கடந்த மாதம் 17ம் தேதி கலவரம் நடந்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் கைது செய்து வருகின்றனர்.அதில், 'வாட்ஸ் ஆப்' குழுவில் வன்மத்தை துாண்டும் வகையில் பதிவு செய்து கலவரம் ஏற்பட காரணமாக இருந்த கடலுார் மாவட்டம் திட்டக்குடி அடுத்த டி.ஏந்தல் சுந்தரம் மகன் சிவக்குமார், 22; எழுத்துார் ராமதாஸ் மகன் சத்யராஜ், 36; கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த நத்தகாளி ஏழுமலை மகன் சுந்தர்,19; மற்றும் பள்ளி சொத்துக்களை சேதம் செய்தது. போலீஸ் வாகனம் மீது கல்வீசி தாக்கியது தொடர்பாக, டி.ஏந்தல் அமிர்தலிங்கம் மகன் முத்தையா, 23; சின்னசேலம் அடுத்த சிறுவத்துார் அன்வர் மகன் சர்புதீன்,45; என 5 பேரை நேற்று கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 5 பேரையும், கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X