போக்குவரத்து நெரிசலை தவிர்க்க...மேம்பாலங்கள்; சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

Updated : ஆக 24, 2022 | Added : ஆக 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி : 'புதுச்சேரி நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட, முக்கிய சாலை சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என சட்டசபையில் கேள்வி நேரத்தில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், நேற்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:பாஸ்கர்(என்.ஆர்.காங்.,): கிழக்கு கடற்கரை சாலையில்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க...மேம்பாலங்கள்;  சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு


புதுச்சேரி : 'புதுச்சேரி நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட, முக்கிய சாலை சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என சட்டசபையில் கேள்வி நேரத்தில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், நேற்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:பாஸ்கர்(என்.ஆர்.காங்.,): கிழக்கு கடற்கரை சாலையில் மரப்பாலம் மூப்பனார் சிலையில் இருந்து அரியாங்குப்பம் பாலம் வரை அகலப்படுத்தும் எண்ணம் அரசுக்கு உள்ளதா? எப்போது? எந்த காலக்கெடுவுக்குள் சாலை அகலப்படுத்தப்படும்.




கடலுார் சாலைஅகலப்படுத்தப்படுமா


அமைச்சர் லட்சுமிநாராயணன்: சாலை அகலப்படுத்தும் எண்ணம் அரசுக்கு உள்ளது. நில ஆர்ஜித பணிகள் வரைவு நிலையில் உள்ளது. இதற்கான இடத்தை கையகப்படுத்தி, அரசின் ஒப்புதல் பெற்ற பின் விரிவாக்க பணிகள் தொடங்கும்.பாஸ்கர்: பலமுறை கேள்வி எழுப்பியும் ஒரே பதிலைத்தான் கூறுகிறீர்கள். இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் தினம் தினம் அவதிப்படுகின்றனர். அரியாங்குப்பத்தில் இருந்து புதுச்சேரிக்கு வர 20 நிமிடத்திற்கு மேலாகிறது.



ரூ.30 கோடி தேவை


அமைச்சர் லட்சுமிநாராயணன்: தற்போது அந்த சாலை 15 முதல் 22 மீட்டருக்குள் உள்ளது. அதனை 30 மீட்டராக அகலப்படுத்த வேண்டும். அதற்கு தேவைப்படும் நிலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நிலம் ஆர்ஜிதம் செய்ய ரூ.30 கோடி தேவைப்படுகிறது.மேலும், 5 சாலைகள் சந்திக்கும் மரப்பாலம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக 'நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக் ஷன்' நிறுவனத்திடம் திட்ட வரையறை தயாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மரப்பாலம் முதல் முருங்கப்பாக்கம் வரையில் மேம்பாலம் மற்றும் புறவழிச் சாலை அமைக்கும் திட்டமும் அரசிடம் உள்ளது.சம்பத் (தி.மு.க.,): மரப்பாலம் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சாலை நடுவில் உள்ள மூப்பனார் சிலையை மாற்றி அமைக்க வேண்டும். அதற்கான இடமும் கண்டறியப்பட்டுள்ளது. சிலையை மாற்றி அமைத்தால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.செந்தில்குமார் (தி.மு.க.,): புதுச்சேரி - கடலுார் சாலை முழுவதுமே கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அதனால், அந்த சாலையை முள்ளோடை வரை அகலப்படுத்தி 'சென்டர் மீடியன்' அமைக்க வேண்டும்.



போக்குவரத்து நெரிசல்


நேரு (சுயே.,) : நெல்லித்தோப்பு சிக்னல் முதல் மூலக்குளம் வரை சாலை குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த மாதத்தில் 5 பேர் இறந்துள்ளனர். இந்த சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றியதாக கூறப்படுகிறது. ஆனால், அதே நிலைதான் தொடர்கிறது. சாலையை அகலப்படுத்த வேண்டும்.ரமேஷ்(என்.ஆர்.காங்.,): ராஜிவ் சிக்னல் - வழுதாவூர் சாலை, ராஜிவ் சிக்னல்-காமராஜர் சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புறவழிச்சாலை


முதல்வர் ரங்கசாமி: புதுச்சேரி நகரில் கிழக்கு கடற்கரை சாலை, கோரிமேடு சாலை, வழுதாவூர் சாலை, ரெட்டியார்பாளையம் சாலை, கடலுார் சாலை என 5 சாலைகள் சந்திப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.குறிப்பாக மரப்பாலத்தை கடக்க 20 நிமிடங்களுக்கு மேலாகிறது. கடலுார் சாலையில் வாகனம் முந்திச் செல்ல முடியவில்லை. அந்தளவிற்கு வாகன பெருக்கம் அதிகரித்துள்ளது. நகரம் விரிவடைந்துள்ளது.

ஆனால், அதற்கேற்ப சாலைகள் இல்லை.புதுச்சேரி எல்லைகளில் இருந்து நகரை நெருங்கும் போது சாலைகளில் நெரிசல் அதிகரித்து விடுகிறது.இதனால் நகருக்குள் வராமல் நேரடியாக வெளியே செல்ல மாற்று ஏற்பாடுகளான புறவழிச்சாலை, சுற்றுச்சாலை அமைக்கும் திட்டம் உள்ளது.




மேம்பாலம்


அரும்பார்த்தபுரத்தில் இருந்து 100 அடி சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பணி விரைவில் முடிக்கப்படும். இப்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் ரெட்டியார் பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.அதேபோன்று, கிழக்கு கடற்கரை சாலையில் சிவாஜி சிலை முதல் இந்திரா சிலை வரையிலான மேம்பாலம் திட்டம் செயல்படுத்தும் போது, இந்திரா சிக்னலில் இருந்து சுப்பையா சிலை வரையில் மேம்பாலம் அமைக்கப்படும்.இவ்வாறு முதல்வர் ரங்கசாமி கூறினார்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X