அரசியல் வழக்கில் 'ஜாமின்' கோரி சி.பி.ஐ., சிறப்பு நீதிபதிக்கு மிரட்டல்

Updated : ஆக 24, 2022 | Added : ஆக 24, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
கோல்கட்டா : திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் அனுப்ரதா மொண்டலுக்கு, 'ஜாமின்' வழங்கவில்லை எனில், குடும்பத்தார் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலி வழக்கு பதிவு செய்யப்படும் என, சி.பி.ஐ., சிறப்பு நீதிபதிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் அனுப்ரதா மொண்டல், கால்நடைகளை கடத்திய வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை
 சிபிஐ, திரிணமுல் காங்கிரஸ்,  அனுப்ரதா மொண்டல்,சிபிஐ நீதிபதி, CBI, Trinamul Congress, Anuprata Mondal, CBI Judge,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


கோல்கட்டா : திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் அனுப்ரதா மொண்டலுக்கு, 'ஜாமின்' வழங்கவில்லை எனில், குடும்பத்தார் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலி வழக்கு பதிவு செய்யப்படும் என, சி.பி.ஐ., சிறப்பு நீதிபதிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil newsதிரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் அனுப்ரதா மொண்டல், கால்நடைகளை கடத்திய வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் அசன்சால் மாவட்ட சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் சக்கரவர்த்திக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'இந்த வழக்கில் அனுப்ரதா மொண்டலுக்கு உடனடியாக ஜாமின் வழங்கப்படவில்லை எனில், உங்கள் குடும்பத்தார் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலி வழக்குப் பதிவு செய்யப்படும்' என, மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

திரிணமுல் காங்கிரசை சேர்ந்த பப்பா சட்டர்ஜி என்பவரது பெயரில் இந்த கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் அவர் அதை மறுத்துள்ளார். தன் பெயரில் யாரோ போலியாக கடிதம் அனுப்பி உள்ளதாக பப்பா சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக, பஸ்சிம் வர்த்தமான் மாவட்ட நீதிபதியிடம் சிறப்பு நீதிபதி ராஜேஷ் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தை, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்து செல்லவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
24-ஆக-202209:33:44 IST Report Abuse
Suri இதென்ன பிரமாதம்??
Rate this:
Suri - Chennai,இந்தியா
24-ஆக-202210:21:15 IST Report Abuse
Suriலோயா கதையெல்லாம் எல்லோருக்கும் தெரியும்.......
Rate this:
raja - Cotonou,பெனின்
24-ஆக-202214:03:53 IST Report Abuse
rajaஆனால் திராவிட கோமாளி ஆட்சியில் கடிதம் எல்லாம் வராது வீட்டுக்கு ஆட்டோ வரும்......
Rate this:
raja - Cotonou,பெனின்
24-ஆக-202214:54:54 IST Report Abuse
rajaசாதிக் முதல் முன்னாள் மேகாலயா கவர்னர் கதை கூட தமிழருக்கு தெரியும் திருட்டு திராவிட ஓங்கோல் கொள்ளை கூட்ட குடும்பம் எப்படி பட்டது என்று கொத்தடிமையே.........
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
24-ஆக-202209:14:47 IST Report Abuse
GMM டெல்லி, கல்கத்தா, பம்பாய், கேரளா நீதிமன்றத்தில் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் போல் CISF பாதுகாப்பில் கொண்டுவரவும். அரசியல் ரவடிசம் நிர்வாகத்தை சீர்குலைத்து நீதிமன்றம் பக்கம் தன் பார்வையை செலுத்த துவங்கிவிட்டது. காரணம் மென்மை போக்கு.
Rate this:
Cancel
24-ஆக-202207:45:08 IST Report Abuse
ராமகிருஷ்ணன் திராவிட மாடல் ஆட்சி கோல்கட்டாவுக்கு போய்விட்டது.
Rate this:
raja - Cotonou,பெனின்
24-ஆக-202214:05:20 IST Report Abuse
rajaசும்மா பொய் சொல்லாதீங்க... திராவிட மாடல் ஆட்சியில் வீட்டுக்கு ஆட்டோ தானே வரும்....இப்படி கடிதம் எல்லாம் வராது.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X