அறிவியல் தமிழ் பாடம் அண்ணா பல்கலையில் அறிமுகம்| Dinamalar

'அறிவியல் தமிழ்' பாடம் அண்ணா பல்கலையில் அறிமுகம்

Added : ஆக 24, 2022 | |
இன்ஜினியரிங் மாணவர்களுக்கு 'அறிவியல் தமிழ், தமிழர் மரபு' மற்றும் 'மைனர் டிகிரி' படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நடப்பு கல்வி ஆண்டில், இந்த பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் பாடத் திட்டத்தை மாற்ற, கடந்த ஆட்சியில் முயற்சி எடுக்கப்பட்டது. முன்னாள் துணை வேந்தர் சுரப்பாவின் மேற்பார்வையில், புதிய பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு,

இன்ஜினியரிங் மாணவர்களுக்கு 'அறிவியல் தமிழ், தமிழர் மரபு' மற்றும் 'மைனர் டிகிரி' படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நடப்பு கல்வி ஆண்டில், இந்த பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.



அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் பாடத் திட்டத்தை மாற்ற, கடந்த ஆட்சியில் முயற்சி எடுக்கப்பட்டது. முன்னாள் துணை வேந்தர் சுரப்பாவின் மேற்பார்வையில், புதிய பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு, முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, கடந்த கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.இதையடுத்து, தி.மு.க., ஆட்சி வந்த பின், இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை மாற்றம் செய்ய, குழு அமைக்கப்பட்டது. துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையிலான பேராசிரியர்கள், இந்த பணிகளை மேற்கொண்டனர். இந்த பாடத்திட்டத்துக்கு, சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.



தமிழ் தொழில்நுட்ப பாடம்



புதிய பாடத் திட்டம், பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் ஆகின்றன. அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், முதல் செமஸ்டரில், 'அறிவியல் தமிழ்' என்ற பாடம் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது.முந்தைய காலங்களில், தமிழகத்தில் பின்பற்றப்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்கள், இந்த பாடத்தில் இடம்பெறுகின்றன. இரண்டாம் ஆண்டின் முதல் செமஸ்டரில் 'தமிழர் மரபு' என்ற பாடம் அறிமுகமாகிறது. இதில் தமிழர்களின் தொழில்நுட்ப கலாசாரம் குறித்த அம்சங்கள் இடம் பெறுகின்றன.இது தவிர, ஆங்கில மொழி வளம் உள்ள மாணவர்களுக்கு, ஜெர்மன், பிரெஞ்ச் மற்றும் ஜப்பானிய மொழிகள், விருப்ப மொழியாக அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழ் வழி மாணவர்களுக்கு, ஆங்கில மொழியை சரளமாக பேச, எழுத கற்றுத் தரப்பட உள்ளது.தேசிய மாணவர் படையான என்.சி.சி., மாணவர்களுக்கு, இரண்டு 'கிரெடிட்' மதிப்பெண்ணில் தனி பாடம் இடம் பெறுகிறது.



போட்டி தேர்வு பாடங்கள்



இது மட்டுமின்றி, ஒவ்வொரு பாடப்பிரிவு மாணவர்களுக்கும் தனித்தனியாக, அந்த பாடம் சார்ந்த விருப்ப பாடங்களும் உள்ளன. மேலும், 'மைனர் டிகிரி' அல்லது' ஹானர்ஸ்' என்ற கூடுதல் படிப்புக்கான சான்றிதழ் வழங்கும் வகையில், விருப்ப பாடங்களும் அறிமுகம் செய்யப்படுகின்றன.இதில், இன்ஜினியரிங் மாணவர்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் எழுத தேவையான நிர்வாகம், பொருளாதாரம், நிதி மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விருப்ப பாடங்களும் அறிமுகம் ஆகின்றன.அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும் ஏழு மற்றும் எட்டாம் செமஸ்டர் காலத்தில், ஆறு மாதம் தொழிற்சாலையில் நேரடி களப்பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X