குரூப் 1 தேர்வு: 3.16 லட்சம் விண்ணப்பம்

Added : ஆக 24, 2022 | |
Advertisement
குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கு, 3.16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழக அரசு துறைகளில், துணை கலெக்டர் உள்பட, ஆறு வகை பதவிகளில், 92 காலியிடங்களை நிரப்ப, அரசு பணியாளரை் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில் அக்., 30ல் குரூப் 1 முதல்நிலை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு ஜூலை 23 முதல் 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு நடந்தது. இதன் முடிவில், மூன்று லட்சத்து, 16 ஆயிரத்து, 678 பேர் விண்ணப்ப

குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கு, 3.16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழக அரசு துறைகளில், துணை கலெக்டர் உள்பட, ஆறு வகை பதவிகளில், 92 காலியிடங்களை நிரப்ப, அரசு பணியாளரை் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில் அக்., 30ல் குரூப் 1 முதல்நிலை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு ஜூலை 23 முதல் 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு நடந்தது. இதன் முடிவில், மூன்று லட்சத்து, 16 ஆயிரத்து, 678 பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர்.

மொத்தம், 300 மதிப்பெண்களுக்கு நடக்கும் தேர்வில், இட ஒதுக்கீட்டு பிரிவினர், 90 மதிப்பெண்களும், மற்றவர்கள், 120 மதிப்பெண்களும் பெற்றால், அவர்கள் பிரதான தேர்வுக்கு தகுதி பெறுவர்.தேர்ச்சி பெறுவோரில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களில், ஒரு பதவிக்கு, 20 பேர் வீதம் பிரதான தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இதில், ஒரே மதிப்பெண்ணை பலர் பெற்றிருந்தால், அவர்கள் அனைவரும் பிரதான தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X