வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மருத்துவ பரிசோதனைக்காக காங்., தலைவர் சோனியா வெளிநாடு செல்கிறார். அவருடன், ராகுல், பிரியங்காவும் உடன் செல்கின்றனர். அவர் எப்போது செல்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை.
ஜனாதிபதி திரவுபதி முர்முவை காங்., தலைவர் சோனியா நேற்று(ஆக.,23) சந்தித்தார்.
காங்கிரஸ் கட்சியில், உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் கட்சி வழங்கிய பொறுப்புகளில்இருந்து ராஜினாமா செய்துவிட்டனர். இச்சூழ்நிலையில், நேற்று ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை, காங்., தலைவர் சோனியா சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக சோனியா வெளிநாடு செல்ல உள்ளனர். அவருடன், ராகுல் மற்றும் பிரியங்காவும் உடன் செல்கின்றனர். இதனை அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். மேலும் அவர் வரும் 4 ம் தேதி டில்லியில் நடக்கும் கூட்டம் ஒன்றில் ராகுல் பேச உள்ளதாகவும், சோனியா நாடு திரும்பும் வழியில் அவரது தாயாரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.