மில் உரிமையாளர் கடத்தி கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை

Added : ஆக 24, 2022 | |
Advertisement
திருப்பூர் முதலிபாளையம் அடுத்த மானுாரை சேர்ந்தவர் ஆனந்த், 25. தென்னந்தோப்பு மற்றும் ஆயில் மில் உரிமையாளர். அவரது நண்பர்கள் பாலகுரு, 35, நாகரத்தினம், 34 மற்றும் ராஜா முகமது ஆகியோர் ஆனந்தை கடத்தி மிரட்டி, 50 லட்சம் ரூபாய் பணம் பறிக்க திட்டமிட்டனர். கடந்த, 2018 அக்., 4ல், ஆனந்த் ஈரோடு சென்ற போது, மூவரும் உடன் சென்றனர். ஈரோடு செல்லும் வழியில் பல்லவராயம்பாளையம் - இரட்டை கிணறு பகுதியில்
மில் உரிமையாளர் கடத்தி கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர் முதலிபாளையம் அடுத்த மானுாரை சேர்ந்தவர் ஆனந்த், 25. தென்னந்தோப்பு மற்றும் ஆயில் மில் உரிமையாளர். அவரது நண்பர்கள் பாலகுரு, 35, நாகரத்தினம், 34 மற்றும் ராஜா முகமது ஆகியோர் ஆனந்தை கடத்தி மிரட்டி, 50 லட்சம் ரூபாய் பணம் பறிக்க திட்டமிட்டனர். கடந்த, 2018 அக்., 4ல், ஆனந்த் ஈரோடு சென்ற போது, மூவரும் உடன் சென்றனர். ஈரோடு செல்லும் வழியில் பல்லவராயம்பாளையம் - இரட்டை கிணறு பகுதியில் ஆனந்தை கழுத்தை நெரித்து கொலை செய்து தப்பினர்.

ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிந்து, பாலகுரு மற்றும் நாகரத்தினத்தை கைது செய்தனர்.இவ்வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு குற்றவியல் வக்கீல் கனகசபாபதி ஆஜரானார். இதில், மாவட்ட தலைமை நீதிபதி சொர்ணம் நடராஜன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், பாலகுரு, நாகரத்தினத்துக்கு ஆயுள் சிறை மற்றும் தலா, 4,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பின் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய ராஜா முகமது நான்கு ஆண்டாக தலைமறைவாக உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X