இன்றும் தொடர்கிறது பஸ் ஊழியர் ஊதிய பேச்சு

Added : ஆக 24, 2022 | |
Advertisement
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்துக்கான, நேற்றைய பேச்சில் உடன்பாடு எட்டப்படாததால், இன்றும் தொடர்கிறது.தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் குறித்த, ஏழாம் கட்ட முத்தரப்பு பேச்சு, நேற்று தொடங்கியது. சென்னை, குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் நடந்த பேச்சில், 67 தொழிற்சங்கத்தினர்

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்துக்கான, நேற்றைய பேச்சில் உடன்பாடு எட்டப்படாததால், இன்றும் தொடர்கிறது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் குறித்த, ஏழாம் கட்ட முத்தரப்பு பேச்சு, நேற்று தொடங்கியது. சென்னை, குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் நடந்த பேச்சில், 67 தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.அவர்களிடம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சு நடத்தினார்.

பின், 'ஏற்கனவே பேசிய விஷயங்கள் தவிர்த்து ஏதேனும் கருத்துகள் இருந்தால், தனித்தனியே வந்து என்னிடம் தெரிவிக்கலாம்' எனக் கூறி, தனியறைக்குச் சென்றார். அதைத் தொடர்ந்து, ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சி தொழிற்சங்கத்தினர் அதிகளவில் அமைச்சரை சந்தித்தனர். இதில் பங்கேற்க விருப்பமின்றி, 25 தொழிற்சங்கங்கத்தினர் காத்திருந்தனர். இதையடுத்து மாலை 6:30 மணிக்கு, ஏழாம் கட்ட பேச்சு, இன்றும் தொடரும் எனக் கூறி அமைச்சரும், மேலாண் இயக்குனர்களும் கிளம்பினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X