ஹோட்டலில் சாப்பிட்டதும் தர்ற பில்லுக்கு, 'அடுத்த மாதம் தொகையை தருகிறோம்' என்றால், ஏற்றுக் கொள்வாங்களா?

Added : ஆக 24, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி:மின் துறைக்கு, மத்திய அரசு கொடுக்கும், 'பில்' தொகையை கட்ட வேண்டியுள்ளது. அதை சரிபார்க்கும் வசதிகளை ஏற்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பில் கொடுத்து விட்டு அவகாசம் தராமல் இருப்பது சரியல்ல.ஹோட்டலில் சாப்பிட்டதும் தர்ற பில்லுக்கு, 'அடுத்த மாதம் தொகையை தருகிறோம்' என்றால், ஏற்றுக்
பேச்சு பேட்டி அறிக்கை, செந்தில்பாலாஜி, நாராயணன் திருப்பதி ,  அதிமுக, பாமக, திமுக, பாஜ,  செந்தில்குமார், எம்.பி., கோவை செல்வராஜ், பன்னீர்செல்வம், ராமதாஸ், அமைச்சர்,


மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி:


மின் துறைக்கு, மத்திய அரசு கொடுக்கும், 'பில்' தொகையை கட்ட வேண்டியுள்ளது. அதை சரிபார்க்கும் வசதிகளை ஏற்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பில் கொடுத்து விட்டு அவகாசம் தராமல் இருப்பது சரியல்ல.

ஹோட்டலில் சாப்பிட்டதும் தர்ற பில்லுக்கு, 'அடுத்த மாதம் தொகையை தருகிறோம்' என்றால், ஏற்றுக் கொள்வாங்களா?
அ.தி.மு.க., பன்னீர்செல்வம் அணியின், கோவை மாநகர செயலர் செல்வராஜ் பேட்டி:


பழனிசாமி அனைத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்; இல்லையேல், அவரது ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியலை வெளியிடுவேன். நாங்கள் அளித்த ஆதாரங்கள் அடிப்படையில் தான், இரண்டு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விரைவில், மற்றவர்களின் ஊழல் ஆதாரங்களையும் வெளியிடுவோம்.

அ.தி.மு.க., ஆட்சியில் உங்க பன்னீர்செல்வமும், ஒரு அங்கம் என்பதை மறந்துட்டீங்களா?
தர்மபுரி, தி.மு.க., - -எம்.பி., செந்தில்குமார் பேட்டி:


காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி, பா.ம.க., தலைவர் அன்புமணி நடத்திய நடைபயணத்திற்கு மக்களிடையே ஆதரவு இல்லை. இத்திட்டம் பற்றி அன்புமணிக்கு புரிதல் இல்லை. அரசியல் செய்யவே நடைபயணம் மேற்கொண்டார்.'

எதிர்க்கட்சிகள் என்றால், அரசியல் செய்யாமல் அவியலா செய்வர்' என, உங்க தலைவர் ஸ்டாலின், ஒரு காலத்தில் கேட்டதை மறந்துட்டீங்களா?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:


'கவுரவ விரிவுரையாளர்கள் பணி வரன்முறை செய்யப்படுவர்' என, தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், பல மாதங்களாகியும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கவுரவ விரிவுரையாளர்கள், சாலையில் இறங்கி போராடும் நிலையை அரசே உருவாக்கக் கூடாது. இனியும் தாமதிக்காமல், கவுரவ விரிவுரையாளர்களில் தகுதியுடைய அனைவரையும், உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.


latest tamil news
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவாங்க என்பதை, தி.மு.க., தரப்பிடம் எதிர்பார்க்கலாமா?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:


'இப்ப நீங்க பார்க்கும், இந்த நவீன சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போகிறோம்; காத்திருங்கள்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போதும் ஐயா போதும்... நடந்து கொண்டிருக்கும் அனைத்து சம்பவங்களுக்கும்,முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து, மேலும் பல சம்ப வங்களை சென்னையில் செய்யப் போகிறோம் என்று பயமுறுத்தாதீர்கள்; சென்னைவாசிகளால் தாங்க முடியாது.

பொதுவா, 'சம்பவம்' என்ற வார்த்தையை பிரபல தாதாக்கள் தானே பயன்படுத்துவாங்க... அதனால, நீங்க பயப்படுறதுலயும் நியாயம் இருக்குது!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
25-ஆக-202210:08:19 IST Report Abuse
suresh kumar //ஹோட்டலில் சாப்பிட்டதும் தர்ற பில்லுக்கு, 'அடுத்த மாதம் தொகையை தருகிறோம்' என்றால், ஏற்றுக் கொள்வாங்களா?// பல ஹோட்டல்களிலும் மளிகைக்கடைகளிலும் அக்கவுண்ட் வைத்து அடுத்த மாத சம்பளம் வந்த பிறகு தரும் வழக்கம் வாடிக்கையானதுதான்.
Rate this:
Cancel
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
24-ஆக-202220:08:33 IST Report Abuse
சாண்டில்யன் ஹோட்டலில் சாப்பிட்டதும் தர்ற பில்லுக்கு, 'அடுத்த மாதம் தொகையை தருகிறோம்' என்றால், ஏற்றுக் கொள்வாங்களா? இது நல்ல கேள்விதான் அப்போ CAG யா வீட்டுக்கு அனுப்பிடலாமா? அவனவன் ஜீரோ டவுன் பேமெண்ட்ன்னு கதரூறானுங்க கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக்கான கொள்முதல் விலை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது இவருக்கு தெரியுமா?
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
24-ஆக-202217:05:24 IST Report Abuse
Kalyan Singapore அந்தந்த மாத வாடகையை அடுத்த மாதம் ஒன்றாம் தேதி கொடுக்கும் வழக்கம் இந்தியாவில் சில மாநிலங்கள் சில ஊர்களில் மட்டுமே. சிங்கப்பூர் உட்பட உலக நாடுகள் அனைத்திலும் அந்தந்த மாத வாடகையை அந்தந்த மாதத்தின் முதல் தேதியிலேயே கொடுக்க வேண்டும். வருமான வரியோ அடுத்த வருடம் கொடுத்தால் போதுமானது ( இந்தியாவில் வருமானத்திலேயே வருமான வரி கழித்து தான் கொடுக்கப்படும் )
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X