அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் விமானப் பயணிகள் எண்ணிக்கை: மத்திய அமைச்சர் எதிர்பார்ப்பு

Updated : ஆக 24, 2022 | Added : ஆக 24, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி: அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 40 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது: கோவிட் பரவலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து
 விமானப் பயணிகள், ஜோதிராதித்ய சிந்தியா, Jyotiraditya Scindia, Air Passenger,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 40 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது: கோவிட் பரவலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை மீண்டு வருகிறது. தற்போது இந்தத் துறை வளர்ச்சிப் பாதையில் உள்ளது. அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 40 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன.


latest tamil news


அடுத்த 5 ஆண்டுகளில் அந்த நிறுவனங்களிடம் 1,200 விமானங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2013-14ம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் கூடுதலாக 67 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் விமான நிலையங்களின் வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Radj, Delhi - New Delhi,இந்தியா
24-ஆக-202219:35:35 IST Report Abuse
Radj, Delhi முதல்ல விமான டிக்கெட் விலையேற்றத்தை கட்டுப்படுத்துங்க அப்புறம் அடுத்த 10 ஆண்டுகளில் மக்கள் பயணம் இரட்டிப்பாகும் என்று சொல்லலாம்.
Rate this:
Cancel
மண்டகசாயம் - மார்த்தாண்டம்,இந்தியா
24-ஆக-202213:41:51 IST Report Abuse
மண்டகசாயம் என்ன சார் சொல்றீங்க?? ஊர்பட்ட கடன் இருந்தும் இலங்கை அரசு விமான சேவையை விற்கல, ஆனா நீங்க? சொந்தமாக விமானம் இல்லாத நாடுகள் பட்டியலில் சேர்ந்துட்டீங்க
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
24-ஆக-202211:42:18 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஏன் எல்லோரையும் விமானத்தில் ஏற்றி கைலாச நாட்டில் குடி ஏற்ற போகிறீர்களா என்ன, அதற்க்கு முதலில் அதிபர் நித்தியானதாவிடம் அனுமதி வாங்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X