அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் விமானப் பயணிகள் எண்ணிக்கை: மத்திய அமைச்சர் எதிர்பார்ப்பு| Dinamalar

அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் விமானப் பயணிகள் எண்ணிக்கை: மத்திய அமைச்சர் எதிர்பார்ப்பு

Updated : ஆக 24, 2022 | Added : ஆக 24, 2022 | கருத்துகள் (3) | |
புதுடில்லி: அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 40 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது: கோவிட் பரவலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து
 விமானப் பயணிகள், ஜோதிராதித்ய சிந்தியா, Jyotiraditya Scindia, Air Passenger,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 40 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.



டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது: கோவிட் பரவலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை மீண்டு வருகிறது. தற்போது இந்தத் துறை வளர்ச்சிப் பாதையில் உள்ளது. அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 40 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன.



latest tamil news


அடுத்த 5 ஆண்டுகளில் அந்த நிறுவனங்களிடம் 1,200 விமானங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2013-14ம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் கூடுதலாக 67 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் விமான நிலையங்களின் வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X