டெல்டாவில் 10.5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணி

Added : ஆக 24, 2022 | |
Advertisement
மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடியை தாண்டிய நிலையில் இருப்பதாலும், மழை தொடரும் என்ற அறிவிப்பால், டெல்டா மாவட்டங்களில், 10.5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர். கடந்த மே மாதம், 24ல் மேட்டூர் அணைக்கு கூடுதல் நீர்வரத்து இருந்ததால், குறுவை சாகுபடிக்காக முன் கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடி பணிகள் இறுதி


மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடியை தாண்டிய நிலையில் இருப்பதாலும், மழை தொடரும் என்ற அறிவிப்பால், டெல்டா மாவட்டங்களில், 10.5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட உள்ளனர்.
கடந்த மே மாதம், 24ல் மேட்டூர் அணைக்கு கூடுதல் நீர்வரத்து இருந்ததால், குறுவை சாகுபடிக்காக முன் கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடி பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
மேலும், நடப்பாண்டு மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது, 120 அடியை எட்டியுள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்யும் என்ற அறிவிப்பால், டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணியில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், சம்பா சாகுபடிக்கு அரசு துறை அதிகாரிகள் கை கொடுக்க வேண்டும்; சிறப்பு சம்பா தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் கூறியதாவது: நடப்பாண்டு டெல்டாவில் குறுவை சாகுபடியை தொடர்ந்து, சம்பா சாகுபடியை, தொடங்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதே நேரத்தில் டெல்டாவில் மழை தொடரும் என்ற வானிலை அறிவிப்பும், விவசாயிகளுக்கு சாதகமாக உள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டமும், வரும் செப்டம்பர் மாதம், நிரம்பும் வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்கி, நீண்ட கால ரகங்களை பயிரிட தயாராக உள்ளனர். வரும், நவம்பர், டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழையின் போது, பயிர்கள் நன்கு வளர்ந்து மழையை சமாளிக்கும் நிலை ஏற்படும்.
சம்பா சாகுபடியை விவசாயிகள் முன்கூட்டியே செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால், வேளாண்மை துறையினர் உடனடியாக விதை பொருட்கள், வேளாண் இடுபொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும். வரும் ஜனவரி முதல் வாரத்துக்குள் சம்பா அறுவடையை முடித்து, உளுந்து, பயிறு சாகுபடிக்கு தயாராக வேண்டும். காரணம் நெல் விவசாயத்தில், ஒன்பது ரூபாயை செலவு செய்து, ஒரு ரூபாயை லாபம் பெற முடியும். ஆனால், உளுந்து, பயிறு விவசாயத்தில், ஒரு ரூபாயை செலவு செய்து, ஒன்பது ரூபாயை லாபமாக பெற முடியும். இதனால், சம்பா சாகுபடியை முன் கூட்டியே தொடங்குவதற்கு, அரசு துறை அதிகாரிகள் சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு, கைகொடுக்க தயாராக இருக்க வேண்டும்.
மேலும், இதுவரை குறுவை தொகுப்பு திட்டம் குறித்து அரசு எதுவும் அறிவிக்கவில்லை. நடப்பாண்டு டெல்டா மாவட்டங்களில், 10.5 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது. இதனால், சம்பா தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X