'விநாயகர் சிலைகள் பீடத்துடன் சேர்த்து 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது'

Added : ஆக 24, 2022 | |
Advertisement
''விநாயகர் சிலைகள், பீடத்துடன் சேர்த்து, 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது,'' என, டி.எஸ்.பி., சுரேஷ் பேசினார்.தமிழகத்தில், வரும், 31ல், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதையடுத்து, சிலை வைப்பது, ஊர்வலம் நடத்துவது, சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது போன்ற விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த, சிலை உற்பத்தியாளர், வழிபாடு நடத்துபவர்களுக்கான ஆலோசனை கூட்டம்,


''விநாயகர் சிலைகள், பீடத்துடன் சேர்த்து, 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது,'' என, டி.எஸ்.பி., சுரேஷ் பேசினார்.
தமிழகத்தில், வரும், 31ல், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதையடுத்து, சிலை வைப்பது, ஊர்வலம் நடத்துவது, சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது போன்ற விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த, சிலை உற்பத்தியாளர், வழிபாடு நடத்துபவர்களுக்கான ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.
டி.எஸ்.பி., சுரேஷ் தலைமை வகித்து பேசியதாவது: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலை வைப்பதற்கு முன், வருவாய், போலீசார், மின்வாரியம் மற்றும் தீயணைப்புத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலைகளை அமைக்கக் கூடாது. களி மண்ணால் செய்யப்பட்ட, எவ்வித ரசாயனக் கலவை பயன்படுத்தாத, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட சிலையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விநாயகர் சிலைகள், பீடத்துடன், 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. மதம் தொடர்பான இடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலை அமைப்பதை தவிர்க்க வேண்டும். பூஜிக்கப்பட்ட சிலைகளை, வருவாய், போலீசார், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களால் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். சிலைகள் நிறுவனப்பட்ட நாளில் இருந்து, ஐந்து நாட்களில், வழிபாடுகள் முடித்து கரைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாமக்கல், மோகனுார், எருமப்பட்டி, புதுச்சத்திரம், சேந்தமங்கலம், நல்லிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X