செய்திகள் சில வரிகளில் சேலம்

Added : ஆக 24, 2022 | |
Advertisement
26ல் விவசாயி குறைதீர் கூட்டம்சேலம்: கலெக்டர் அலுவலகம், அறை எண்: 215ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும், 26 காலை, 10:30 மணிக்கு நடக்க உள்ளது. மாவட்ட அளவில் நடக்கும் கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் தொடர்பான குறை, கோரிக்கைகளை, மனு மூலமாகவும் தெரிவிக்கலாம் என, கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.சேலத்தில் 33 பேருக்கு தொற்றுசேலம்: சேலத்தில் நேற்று, 33

26ல் விவசாயி குறைதீர் கூட்டம்
சேலம்: கலெக்டர் அலுவலகம், அறை எண்: 215ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும், 26 காலை, 10:30 மணிக்கு நடக்க உள்ளது. மாவட்ட அளவில் நடக்கும் கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் தொடர்பான குறை, கோரிக்கைகளை, மனு மூலமாகவும் தெரிவிக்கலாம் என, கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் 33 பேருக்கு தொற்று
சேலம்: சேலத்தில் நேற்று, 33 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதில் சேலம் மாநகராட்சியில், 11 பேர், இடைப்பாடி, 5, காடையாம்பட்டி, 2, மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, சேலம் ஒன்றியம், வீரபாண்டி, வாழப்பாடி, மேட்டூர் நகராட்சி தலா ஒருவர் என, சேலம் மாவட்டத்தினர், 24 பேர், தர்மபுரி, நாமக்கல் தலா, 3, ஈரோடு, 2, கள்ளக்குறிச்சி ஒருவர் என, பிற மாவட்டத்தினர், 9 பேருக்கு தொற்று உறுதியானது.
ஆர்ப்பாட்டம்: 18 பேர் கைது
சேலம்: மத்திய அரசின், ஜி.எஸ்.டி., வரி உயர்வை கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில், சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த நேற்று அனுமதி மறுக்கப்பட்டது. அதை மீறி, மாவட்ட அமைப்பாளர் கந்தம்மாள் தலைமையில் உறுப்பினர்கள், ஆதரவு அமைப்பினர், நாட்டாண்மை கழக கட்டடம் முன் திரண்டனர். போலீசார், ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லையென கூறி தடுத்தனர். இதனால், அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால், கந்தம்மாள் உள்பட, 18 பேரை, போலீசார் கைது செய்தனர்.
600 பேருக்கு சைக்கிள் வழங்கல்
சேலம்: அம்மாபேட்டை நகரவை ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன், சைக்கிள்களை வழங்கினர். பெண்கள் பள்ளியை சேர்ந்த, 324 மாணவியர், ஆண்கள் பள்ளியை சேர்ந்த, 276 மாணவர் என, 600 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மண்டல குழு தலைவர் தனசேகர், தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.
பாப்பான்குட்டை நிலம் அளவீடு
பனமரத்துப்பட்டி: நாழிக்கல்பட்டி ஊராட்சியில் உள்ள பாப்பான்குட்டை, பனமரத்துப்பட்டி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ளது. 7 ஹெக்டேரில் உள்ள குட்டையின் ஒரு பகுதியில் ஆக்கிரமித்து, விவசாயம் செய்வதாக புகார் எழுந்தது. நேற்று, பனமரத்துப்பட்டி கமிஷனர் சீனிவாசன், வருவாய்த்துறையினர் நில அளவை பணியில் ஈடுபட்டனர். அதில், 3 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளதை கண்டறிந்து மீட்டனர்.
இன்று வேளாண் ஆலோசனை
பனமரத்துப்பட்டி: சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், இன்று காலை, 11:30 மணிக்கு இணைய வழியில் வேளாண் பிரச்னைக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்படுகிறது. கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் தலைமை வகித்து பேசுகிறார். புதன்தோறும் காலை, 11:30 முதல், 12:30 மணி வரை, இணைய வழியில் விவசாயிகள் கேட்கும் வேளாண் சந்தேங்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். விபரங்களுக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளலாம்.
விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
இடைப்பாடி: கம்யூ., கட்சியின் பிரிவான தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில், இடைப்பாடி தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இடைப்பாடி வட்ட செயலர் ஜெயவேல் தலைமை வகித்தார். அதில், ஆடையூர் முதல் பில்லுக்குறிச்சி வரை உயர் மின்கோபுரம் அமைத்ததற்கு, விவசாயிகள் நிலத்துக்கு, உடனே இழப்பீடு வழங்கவும், தேவூர் முதல் குரும்பப்பட்டி வரை செயல்படுத்த உள்ள உயர்மின் கோபுர பணியை சரபங்கா நதி ஆற்றோரம் கொண்டு செல்லவும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மா.கம்யூ., சேலம் மாவட்ட செயலர் சண்முகராஜா, விவசாய மாவட்ட செயலர் ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். பின், துணை தாசில்தார் ராஜமாணிக்கத்திடம் மனு அளித்தனர்.
ஆலை உரிமத்தை ரத்து செய்!
கெங்கவல்லி: மண்மலை கிராம மக்கள், விவசாயிகள் நேற்று, தாசில்தார் வெங்கடேசனிடம் அளித்த மனு: மண்மலை ஊராட்சி, மொடக்குப்பட்டி, பில்லங்குளத்தில், கல்குவாரி, கல் அரைக்கும் கிரஷர் ஆலை அமைக்கப்படுகிறது. இந்த குவாரி மலைக்குன்றில் உள்ளது. பயன்பாட்டுக்கு வந்தால் நிலத்தடி நீர் பாதிப்பு, காற்று மாசுபாடு ஏற்படும். விலங்குகள் வாழ்விடத்தை இழக்க நேரிடும். 2021, அக்டோபர், 2022 ஆகஸ்டில் நடந்த கிராம சபை கூட்டத்தில், கல் குவாரி உரிமத்தை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், 'கர்சன் பயோ நேச்சுரல்' பெயரில் புதிதாக கட்டப்படும் பூச்சிக்கொல்லி மருந்து ஆலை அனுமதியை ரத்து செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், கல்குவாரி, பூச்சிக்கொல்லி மருந்து ஆலை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
ஆடுகள் திருட்டு: விவசாயி புகார்
கெங்கவல்லி: கணேசபுரத்தை சேர்ந்த விவசாயி கணேசன், 58. இவர், ஆடுகளை வளர்க்கிறார். கடந்த, 21ல், பட்டியில் கட்டி வைத்திருந்த, இரு ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து விவசாயி புகார்படி, கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
கிராம வங்கி ஊழியர்
உண்ணாவிரதம்
சேலம், ஆக. 24-
கிராம வங்கி ஊழியர் சங்கம், வங்கி அதிகாரிகள் அசோசியேஷன் சார்பில், சேலம், அஸ்தம்பட்டி, தமிழ்நாடு கிராம வங்கி தலைமை அலுவலகம் முன் உண்ணாவிரதப்போராட்டம் நேற்று நடந்தது. வங்கி ஊழியர் சம்மேளன மாநில செயலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
அதில், வங்கி அதிகாரிகள் அசோசியேஷன் செயலர் அறிவுடைநம்பி பேசுகையில், ''நிர்வாகத்தின், ஊழியர் விரோதப்போக்கின் கருத்தை, மொபைலில் பதிவிட்ட மதுரவாயல் ரகுகோபால், ஆறுமுகநேரி லட்சுமி நாராயணன் ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்ததை கண்டித்து, உண்ணாவிரதம் நடக்கிறது. அரசியல் சாசனத்துக்கு எதிரான இந்த நடவடிக்கை, ஊழியர்களின் கருத்துரிமையை பறிக்கிறது,'' என்றார்.
தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் செயலர் அஸ்வத், ஊழியர் சங்க மாவட்ட செயலர் தீனதயாளன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அனல் மின் நிலைய
உற்பத்தி நிறுத்தம்
மேட்டூர், ஆக. 24-
மேட்டூரில், 840 மெகாவாட் அனல் மின்நிலையம், 600 மெகாவாட்டில், மற்றொரு அனல் மின் நிலையம் உள்ளது.
தமிழக மின்தேவை, 11 ஆயிரம் மெகாவாட்டாக குறைந்த நிலையில், காற்றாலை மின் உற்பத்தி மூலம், 7,000 மெகாவாட்; சோலார் மூலம், 5,000 மெகாவாட்; நீர்மின்நிலையம் மூலம், 350 மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கிறது. ஏற்கனவே, மேட்டூர், 600 மெகாவாட் அனல் மின்நிலையத்தில், 235 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, 365 மெகாவாட் மின்உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. அதேபோல், 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில், 4 அலகுகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 1,440 மெகாவாட் மின் உற்பத்தியும் நேற்று நிறுத்தப்பட்டது.
ஆட்டோ டிரைவருக்கு
பாதுகாப்பு பெட்டகம்
சேலம், ஆக. 24-
தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில், ஆட்டோ தொழிலாளருக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சேலம், தொழிலாளர் உதவி கமிஷனர் சங்கீதா அறிக்கை:
சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர்(சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் அமைப்பு சாரா ஓட்டுனர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து புதுப்பித்து, நடைமுறையில் உள்ள தொழிலாளருக்கு சீருடை, ஷூ, முதலுதவி பெட்டி அடங்கிய பாதுகாப்பு உபகரண பெட்டகம் வழங்கப்படுகிறது.
இதுவரை பெறாத ஆட்டோ டிரைவர்கள், அசல் பதிவு அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகலுடன், சேலம், கோரிமேடு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பதிவு புதுப்பித்தல் இல்லாத தொழிலாளர், உடனே இணையவழியில் பதிவை புதுப்பித்த பின் பாதுகாப்பு பெட்டகம் பெற்றுக்கொள்ளலாம்.
விபத்தில் தொழிலாளர் பலி
வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
சேலம், ஆக. 24-
சேலம், சுக்கம்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி, 55. கூலித்தொழிலாளியான இவர், 2018, ஆக., 13ல் பருத்திக்காட்டில் சாலையை கடக்க நின்றிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த, இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தார். வீராணம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, காங்கேயம்நல்லுார், காந்தி சாலையை சேர்ந்த பொற்செல்வம், 24, என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் ஜே.எம்.எண், 4ல் நடந்தது. நேற்று பொற்செல்வத்துக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X