பள்ளியில் தேசியக்கொடி ஏற்ற மறுத்த தலைமையாசிரியைக்கு நோட்டீஸ்

Added : ஆக 24, 2022 | |
Advertisement
''பள்ளியில், தேசியக்கொடி ஏற்ற மறுத்த அரசு பள்ளி தலைமையாசிரியைக்கு, ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,'' என, தர்மபுரி மாவட்ட, சி.இ.ஓ., குணசேகரன் கூறினார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:தர்மபுரி மாவட்டம், பேடரஹள்ளி அரசு பள்ளியில் கடந்த, 15ல் சுதந்திர தின விழா நடந்தது. அப்போது, தலைமையாசிரியை தமிழ்ச்செல்வி தேசியக்கொடியை ஏற்ற மறுத்துள்ளார். மேலும், பள்ளி உதவி

''பள்ளியில், தேசியக்கொடி ஏற்ற மறுத்த அரசு பள்ளி தலைமையாசிரியைக்கு, ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,'' என, தர்மபுரி மாவட்ட, சி.இ.ஓ., குணசேகரன் கூறினார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டம், பேடரஹள்ளி அரசு பள்ளியில் கடந்த, 15ல் சுதந்திர தின விழா நடந்தது. அப்போது, தலைமையாசிரியை தமிழ்ச்செல்வி தேசியக்கொடியை ஏற்ற மறுத்துள்ளார். மேலும், பள்ளி உதவி தலைமையாசிரியர் முருகன் தேசியக்கொடி ஏற்றியபோது, அதற்கு மரியாதை செலுத்தாமலும் இருந்துள்ளார். இது குறித்து மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதன்படி, தேசியக்கொடி ஏற்ற மறுத்துடன், தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தாதது குறித்து தலைமையாசிரியை தமிழ்ச்செல்விக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் தராததால், தற்போது, ஒழுங்கு நடவடிக்கை பிரிவு, '17 பி' ன் படி, விளக்கம் கேட்டும் பதிலளிக்காததால், ஏன் உங்கள் மீது, துறைரீதியான நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X