மூங்கிலில் உருவாகும் கைவினை பொருட்கள்!| Dinamalar

மூங்கிலில் உருவாகும் கைவினை பொருட்கள்!

Added : ஆக 24, 2022 | |
உடுமலை : மூங்கில் கூடை உற்பத்தி தொழிலில், உடுமலை பகுதியில், பாரம்பரியமாக ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், விற்பனை சந்தைக்கான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.உடுமலை நகரில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மூங்கில் கொண்டு, கூடை பின்னுதல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.பாரம்பரியமாக இத்தொழிலில்,
மூங்கிலில் உருவாகும் கைவினை பொருட்கள்!


உடுமலை : மூங்கில் கூடை உற்பத்தி தொழிலில், உடுமலை பகுதியில், பாரம்பரியமாக ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், விற்பனை சந்தைக்கான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.உடுமலை நகரில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மூங்கில் கொண்டு, கூடை பின்னுதல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.பாரம்பரியமாக இத்தொழிலில், இக்குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.



கைவினைப்பொருட்கள் மீதான மக்கள் ஆர்வம், விவசாயம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பும் இக் கைத்தொழிலை உயிர்ப்புடன் வைத்துள்ளது.பச்சை மூங்கிலை விலைக்கு வாங்கி,அழகிய நேர்த்தியான பல்வேறு வடிவிலான கூடை தயாரிக்கின்றனர். காய்கறி எடுத்துச்செல்லவும், ஆடுகளை மூடி வைக்கவும், சமைத்த சாதத்தை வடிகட்டவும் பயன்படுகிறது.மேலும், வீட்டு ஜன்னல்களில் அலங்கார 'ஸ்கிரீன்' போன்று மூங்கில் தடுப்பு, பாரம்பரிய முறையிலான முறம், கூண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில், மூங்கில் வலை செய்தும் வருகின்றனர்.



இருப்பினும், மூலப்பொருள் விலை உயர்வு, விற்பனை சந்தை இல்லாதது உள்ளிட்ட பிரச்னைகளளால், இத்தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.பாரம்பரிய தொழிலை பாதுகாக்கும் வகையில், தொழிலாளர் நல வாரியம் வாயிலாக சில நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். நிலையான விலைக்கு மூலப்பொருள் கிடைக்க செய்ய வேண்டும்.மக்கள் கூடும் சந்தை உள்ளிட்ட இடங்களில், மூங்கில் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் வகையில், கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.



அரசு கண்காட்சிகளில், இத்தகைய தயாரிப்புகளை காட்சிப்படுத்தி,விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அத்தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X