விவேகானந்தா கல்வி நிலையம் வெற்றி

Added : ஆக 24, 2022 | |
Advertisement
கோவை : சூலுார் குறுமைய வாலிபால் போட்டியில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகள் பிரிவில் பள்ளப்பாளையம் விவேகானந்தா கல்வி நிலையம் பள்ளி, முதலிடத்தை தட்டிச் சென்றது.கோவை பள்ளி கல்வித்துறை மற்றும் இடையர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், சூலுார் குறுமைய விளையாட்டு போட்டிகள் அரசூர், கே.பி.ஆர்., இன்ஜி., கல்லுாரி மைதானத்தில் நடந்தன. இதில், 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ,


கோவை : சூலுார் குறுமைய வாலிபால் போட்டியில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகள் பிரிவில் பள்ளப்பாளையம் விவேகானந்தா கல்வி நிலையம் பள்ளி, முதலிடத்தை தட்டிச் சென்றது.கோவை பள்ளி கல்வித்துறை மற்றும் இடையர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், சூலுார் குறுமைய விளையாட்டு போட்டிகள் அரசூர், கே.பி.ஆர்., இன்ஜி., கல்லுாரி மைதானத்தில் நடந்தன. இதில், 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான வாலிபால் போட்டியில், 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

மாணவர்கள் பிரிவு
19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில், கதிர்மில்ஸ் பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில், வாகராயம்பாளையம் அரசு பள்ளி அணியையும்; 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில், செஞ்சேரிப்பாளையம் அரசு பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில், விவேகானந்தா கல்வி நிலையம் பள்ளி அணியையும்; 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில், விவேகானந்தா கல்வி நிலையம் பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில், சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி அணியையும் வென்றன.

மாணவிகள் பிரிவு
19 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில், இருகூர் அரசு பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில், எஸ்.எஸ்.பி.எம்.வி., பள்ளி அணியை வென்றது.17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில், எஸ்.எஸ்.பி.எம்.வி., பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில், விவேகானந்தா கல்வி நிலையம் பள்ளி அணியை வென்றது.14 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில் பள்ளப்பாளையம் விவேகானந்தா கல்வி நிலையம் பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில், இருகூர் அரசு பள்ளி அணியை வென்றது.இதில் முதல் இடத்தை பிடித்த அணியினர், கூட்டுகுறுமைய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X