தனியார் வேலைவாய்ப்பு முகாம்; வேலை தேடுவோர் பங்கேற்கலாம்

Added : ஆக 24, 2022 | |
Advertisement
உடுமலை : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் வேலைவாய்ப்பு முகாம், நாளை நடக்கிறது.திருப்பூர், பல்லடம் ரோட்டிலுள்ள கலெக்டர் அலுவலக வளாகம், 4வது தளத்தில் இயங்கும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாளை (26ம் தேதி) நடைபெறுகிறது.அன்றைய தினம் காலை, 10:30 மணிக்கு துவங்கும் முகாமில், தனியார் நிறுவனங்கள்


உடுமலை : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் வேலைவாய்ப்பு முகாம், நாளை நடக்கிறது.திருப்பூர், பல்லடம் ரோட்டிலுள்ள கலெக்டர் அலுவலக வளாகம், 4வது தளத்தில் இயங்கும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாளை (26ம் தேதி) நடைபெறுகிறது.

அன்றைய தினம் காலை, 10:30 மணிக்கு துவங்கும் முகாமில், தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, பணியாளர்களை தேர்வு செய்கின்றனர். வேலை தேடுவோர், தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய விபரங்களுடன் கூடிய படிவத்துடன் முகாமில் பங்கேற்க வேண்டும்.வேலை அளிக்கும் நிறுவனத்தினரும், முன்பதிவு செய்யவேண்டும். எழுத, படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள்; ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தோர், தையல் பயிற்சி பெற்றோர் பங்கேற்கலாம்.வேலைவாய்ப்பு அலுவலக பதிவில் குறைகள் இருப்பின்,

முகாமிற்கு வரும்போது, சரி செய்துகொள்ளலாம். தனியார் துறைகளில் வேலையில் இணைவதால், பயனாளிகளின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.மேலும் விபரங்களுக்கு, 0421 2999152, 94990 55944 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X