ஆதார் இணைக்க சிறப்பு முகாம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு

Added : ஆக 24, 2022 | |
Advertisement
உடுமலை : 'தினமலர்' நாளிதழ் செய்தியின் எதிரொலியாக, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், ஆதார் இணைக்க சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது.திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு பணி நடந்து வருகிறது. எட்டு சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் ஆர்வத்துடன், ஆதார் விபரத்தை இணைத்து வருகின்றனர். சில நேரங்களில், 'சர்வர்' கிடைக்காமல், பணிகள் சோர்ந்து



உடுமலை : 'தினமலர்' நாளிதழ் செய்தியின் எதிரொலியாக, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், ஆதார் இணைக்க சிறப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது.திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு பணி நடந்து வருகிறது. எட்டு சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் ஆர்வத்துடன், ஆதார் விபரத்தை இணைத்து வருகின்றனர். சில நேரங்களில், 'சர்வர்' கிடைக்காமல், பணிகள் சோர்ந்து விடுகின்றன.

மாவட்டத்தில் இதுவரை, 6 சதவீத வாக்காளர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர். எனவே, வாக்காளரின் சிரமத்தை குறைத்து, எளிய முறையில் ஆதார் இணைக்க வழிவகை செய்ய வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியிருந்தனர்.இதுதொடர்பான செய்தி, 'தினமலர்' நாளிதழில் வெளியாகியிருந்தது. அதன் எதிரொலியாக, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், ஆதார் இணைப்புக்கான சிறப்பு முகாம் அமைத்திருந்தது.

பொதுமக்கள் குறைகேட்பு முகாமில், தேர்தல் பிரிவு அலுவலர்கள், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, 'மொபைல்' போன் வாயிலாக, வாக்காளரின் ஆதார் விபரத்தை இணைத்துக்கொடுத்தனர்.சிறப்பு முகாம் மிகுந்த பயனுள்ளதாக இருப்பதால், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டங்கள், விவசாயிகள் குறைகேட்பு கூட்டங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு கூட்டங்கள், ஆதார் இணைப்புக்கான சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என, வாக்காளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X