14 வது மாடியில் இருந்து குதித்துரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை

Added : ஆக 24, 2022 | |
Advertisement
சென்னை:விருகம்பாக்கம் ஐ.ஏ.எஸ்., - - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடியில் இருந்து குதித்து, ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை, விருகம்பாக்கம், நடேசன் நகரில், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான தயிஷா அடுக்கு குடியிருப்பு உள்ளது. இதில், 'ஏ' பிளாக் 14 வது மாடியில், டில்லி காவல் கமிஷனராக

சென்னை:விருகம்பாக்கம் ஐ.ஏ.எஸ்., - - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடியில் இருந்து குதித்து, ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னை, விருகம்பாக்கம், நடேசன் நகரில், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான தயிஷா அடுக்கு குடியிருப்பு உள்ளது. இதில், 'ஏ' பிளாக் 14 வது மாடியில், டில்லி காவல் கமிஷனராக பணியாற்றி வரும், தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான சஞ்சய் அரோரா வீடு அமைந்துள்ளது.
இந்த வீட்டில் நான்கு ஆண்டுகளாக, துாத்துக்குடியை சேர்ந்த மதுசூதன ரெட்டி, 69, என்பவர் தன் மனைவி பத்மாவதி மற்றும் மகள் பூர்ணிமா ரெட்டி ஆகியோருடன் வசித்து வந்தார்.ஓய்வு பெற்ற மருத்துவரான மதுசூதன ரெட்டி, தற்போது ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில், 14 வது மாடியில் இருந்து கீழே குதித்து, மதுசூதன ரெட்டி தற்கொலை செய்து கொண்டார்.இரண்டு ஆண்டுக்கு முன், மது சூதனன் ரெட்டி, தன் மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தார். ஆனால், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஆறு மாதங்களுக்கு முன் கணவரை பிரிந்து வந்தார்.
இதனால், மதுசூதனன் ரெட்டி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர், தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், மதுசூதனன் ரெட்டி, தற்கொலை தொடர்பாக எழுதி வைத்திருந்த எட்டு பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X