சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

கடமையை நிறைவேற்றுவாரா?

Added : ஆக 24, 2022 | |
Advertisement
கடமையை நிறைவேற்றுவாரா?'சத்தமில்லாமல் பல காரியங்களை செய்துள்ளாரே; உண்மையிலேயே கில்லாடி தான்...' என்று, ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங்கை பற்றி ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.புதிய துணை ஜனாதிபதியாக, மேற்கு வங்க கவர்னராக இருந்த ஜக்தீப் தன்கர்சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். பா.ஜ.,வில் பல மூத்த தலைவர்கள் இந்த பதவிக்கு


அக்கம் பக்கம்


கடமையை நிறைவேற்றுவாரா?



'சத்தமில்லாமல் பல காரியங்களை செய்துள்ளாரே; உண்மையிலேயே கில்லாடி தான்...' என்று, ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங்கை பற்றி ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.புதிய துணை ஜனாதிபதியாக, மேற்கு வங்க கவர்னராக இருந்த ஜக்தீப் தன்கர்சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். பா.ஜ.,வில் பல மூத்த தலைவர்கள் இந்த பதவிக்கு கடுமையாக போட்டியிட்ட போது, ஜக்தீப் தன்கருக்கு எப்படி அதிர்ஷ்டம் அடித்தது என, பலரும் குழம்பினர்.
இப்போது தான், அது தொடர்பான தகவல்கள் கசியத் துவங்கியுள்ளன. ஜம்மு - காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, கேரள கவர்னர் ஆரீப் முகமது கான் ஆகிய இருவரில் ஒருவரையே, துணை ஜனாதிபதியாக தேர்வு செய்ய, பா.ஜ., தலைவர்கள் விரும்பினர். துணை ஜனாதிபதி தான், ராஜ்யசபாவின் தலைவர் என்பதால், சபையில் எதிர்க்கட்சிகளிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் ஒருவரையே தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.இதையடுத்து, 'ஜக்தீப் தன்கர் மட்டுமே இதற்கு சரிப்பட்டு வருவார். சபையில் எதிர்க்கட்சியினருக்கு சட்ட விதிகளை காட்டி, கிடுக்கிப் பிடி போடுவார்...' என, யோசனை தெரிவித்துள்ளார் ராஜ்நாத் சிங். அவரது யோசனையை எல்லாரும் ஏற்றதால், ஜக்தீப் துணை ஜனாதிபதியாகி விட்டார். 'இப்போது ராஜ்நாத் சிங்கின் யோசனை சரியானது தான்
என நிரூபிக்க வேண்டிய கடமை, ஜக்தீப் தன்கருக்கு உள்ளது...' என்கின்றனர், பா.ஜ.,வினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X