சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

கூண்டோடு பா.ஜ.,வுக்கு தாவ தயாராகும் தி.மு.க.,வினர்!

Added : ஆக 24, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
''அரசு நிலங்களை, 'ஆட்டைய' போட்டுட்டு இருக்காவ வே...'' என, பேச்சை ஆரம்பித்தார் அண்ணாச்சி.''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''நீலகிரி மாவட்டம், கூடலுார் வருவாய் கோட்டத்துல தான் இந்த அநியாயம் நடக்கு... அரசு நிலங்களை, ரியல் எஸ்டேட் கும்பல் வளைச்சு போட்டு வித்துட்டு இருக்கு வே....''இது போக, கூட்டு பட்டா உள்ள நிலத்துக்கு, உட்பிரிவு பண்ணாம மத்திய அரசு வீடு
டீக்கடை பெஞ்ச்

''அரசு நிலங்களை, 'ஆட்டைய' போட்டுட்டு இருக்காவ வே...'' என, பேச்சை ஆரம்பித்தார் அண்ணாச்சி.

''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''நீலகிரி மாவட்டம், கூடலுார் வருவாய் கோட்டத்துல தான் இந்த அநியாயம் நடக்கு... அரசு நிலங்களை, ரியல் எஸ்டேட் கும்பல் வளைச்சு போட்டு வித்துட்டு இருக்கு வே....''இது போக, கூட்டு பட்டா உள்ள நிலத்துக்கு, உட்பிரிவு பண்ணாம மத்திய அரசு வீடு கட்டும் திட்டத்துல, பலருக்கும் வீடுகளை கட்டி குடுக்காவ...''ஏழை மக்களுக்கான இலவச வீடு கட்டும் திட்டத்துல, 2.25 லட்சம் ரூபாயை மத்திய அரசிடம் வாங்கி, நிறைய பேர் பிளானே இல்லாம பெரிய பெரிய வீடுகளை கட்டுதாவ வே...''பஞ்சாயத்து தலைவர்களும், 20ல இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை வாங்கிட்டு, வீடுகளுக்கான பணி உத்தரவுகளை குடுத்துடுதாவ... மாவட்டம் முழுக்க இந்த முறைகேடு நடக்குன்னு பிரதமர், முதல்வர் அலுவலகங்களுக்கு எதிர்க்கட்சியினர் புகார் அனுப்பியிருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.''ஒரே இடத்துல நாலு வருஷமா பெஞ்ச தேய்ச்சுண்டு இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''நீர்வளத் துறையில நாலு மண்டல தலைமை பொறியாளர்கள் இருக்கா... அது போக, திட்டம் உருவாக்கம், பாசன மேலாண்மை பயிற்சி மையம் உட்பட ஏழு பிரிவுகளுக்கும், தனி தலைமை பொறியாளர்கள் இருக்கா ஓய்...''போன ஆட்சியில, தலைமை பொறியாளர்கள் பலரும் மூணு வருஷமா ஒரே இடத்துல வேலை பார்த்துண்டு இருந்தா... ஆட்சி மாறியதும், ஒரு சிலரை மட்டும் மாத்தினவா மத்தவாளை கண்டுக்கலை ஓய்...''வழக்கமா அரசு துறையில மூணு வருஷத்துக்கு மேல ஒரே இடத்துல இருக்கப்படாது... ஆனா, இங்க நாலு வருஷத்துக்கும் மேல பலர் இருக்கா ஓய்... ஏன்னா, போன ஆட்சியில பழனிசாமிக்கு ஆமாம் சாமி போட்ட அதிகாரிகள், இப்ப துறையின் முக்கிய புள்ளியின் மகனுக்கு சலாம் போட்டுண்டு இருக்கா...''இவாள்லாம் தினமும் ஆபீசுக்கு வராளோ இல்லையோ, அடையார்ல இருக்கற வாரிசு வீட்டுக்கு போய் வணக்கம் போட்டு, காலத்தை ஓட்டிண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.''பா.ஜ.,வுக்கு தாவ தயாராயிட்டு இருக்காங்க...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார் அந்தோணிசாமி.''எந்தக் கட்சியினரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''சென்னையில தி.மு.க., உட்கட்சி தேர்தலை அறிவிச்சதுமே, வார்டுக்கு அஞ்சாயிரம், பத்தாயிரம் உறுப்பினர்களை சேர்த்து, போட்டி போட்டு பலரும் பணத்தை கட்டுனாங்க... கட்சி தேர்தல்ல பதவியை பிடிக்கிறஆர்வத்துல இருந்தாங்க...''அண்ணாதுரை, கருணாநிதி காலத்துல எல்லாம் வேற மாவட்ட கட்சி பிரமுகர்களை அனுப்பி, தேர்தலை நடத்துவாங்க... சில இடங்கள்ல, வெட்டு, குத்து அளவுக்கு கட்சியினர் முட்டிக்கிட்டா, அங்க மட்டும் தேர்தல் நடத்தாம, தலைமையே தலையிட்டு நிர்வாகிகளை அறிவிக்குமுங்க...''ஆனா, இப்ப இருக்கிற சீனியர் மாவட்டச் செயலர், கட்சியின் மூத்த நிர்வாகிகளை ஓரம் கட்டிட்டு, தேர்தலே நடத்தாம தனக்கு வேண்டியவங்களையும், ஆதரவாளர்களையும் மட்டுமே நிர்வாகிகளா நியமிக்க முடிவு பண்ணிட்டாராம்...''அவரது ஆதரவாளர்களுக்கு மட்டும் பதவிகளை வாரி குடுத்துட்டா, பதவி கிடைக்காதவங்க கூண்டோடு பா.ஜ.,வுக்கு தாவிடலாம்கிற முடிவுல இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.சுக்கு காபியை குடித்து முடித்த அண்ணாச்சி, ''நாயரே காபி சூப்பர்... சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை... சுப்ரமணியனுக்கு மிஞ்சிய சாமியும் இல்லைன்னு சும்மாவா சொல்லியிருக்காவ...'' என்றபடியே நடக்க, நண்பர்களும் பின்தொடர்ந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-ஆக-202217:35:50 IST Report Abuse
D.Ambujavalli இந்த கட்டத்துக்கு கட்டம் தாண்டும் பாண்டியாட்டத்தில் கட்சி மாறுபவர்களுக்கெல்லாமா பதவி கிடைக்கிறது? எதிர்பார்ப்போடு போவது, அங்கு எதுவும் நல்லவிதமாக இல்லையென்றால் போன மச்சான் திரும்புவதும் எல்லா இடத்திலும்தான் இருக்கிறது ஐயாயிரம் பேர் கட்சி மாறினாலும் அத்தனை பெறுமா செந்தில் பாலாஜி ஆக முடியும்?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
25-ஆக-202215:44:27 IST Report Abuse
r.sundaram இவர்கள் பிஜேபிக்கு வந்தால், பிஜேபி கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
25-ஆக-202211:15:30 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஹி ஹி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X