இதே நாளில் அன்று| Dinamalar

இதே நாளில் அன்று

Added : ஆக 24, 2022 | |
ஆகஸ்ட் 25, 1906வேலுார் மாவட்டம் காங்கேயநல்லுாரில், மல்லயதாசர் - கனகவல்லி தம்பதிக்கு மகனாக, 1906ல், இதேநாளில் பிறந்தவர் கிருபானந்த வாரியார். எட்டு வயதில் கவிதை எழுதினார். 12 வயதில், 16 ஆயிரம் பாடல்களை மனப்பாடம் செய்தார்; ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெண்பாக்களை எழுதினார். வீணை பயிற்சி பெற்றார். 18 வயதில் ஆன்மிக சொற்பொழிவாற்ற துவங்கினார்.திருப்புகழ், தேவாரம், திருவாசக பாடல்களை


இதே நாளில் அன்று


ஆகஸ்ட் 25, 1906வேலுார் மாவட்டம் காங்கேயநல்லுாரில், மல்லயதாசர் - கனகவல்லி தம்பதிக்கு மகனாக, 1906ல், இதேநாளில் பிறந்தவர் கிருபானந்த வாரியார். எட்டு வயதில் கவிதை எழுதினார். 12 வயதில், 16 ஆயிரம் பாடல்களை மனப்பாடம் செய்தார்; ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெண்பாக்களை எழுதினார். வீணை பயிற்சி பெற்றார். 18 வயதில் ஆன்மிக சொற்பொழிவாற்ற துவங்கினார்.
திருப்புகழ், தேவாரம், திருவாசக பாடல்களை ராகத்துடன் பாடி புதுமையாகவும், சாமானியர்களுக்கு புரியும் வகையிலும் விளக்கினார். இவர், 'திருப்புகழ் அமிர்தம்' என்ற இதழை, 37 ஆண்டுகள் நடத்தினார். இவர் எழுதிய, 'தாத்தா சொன்ன குட்டிக் கதைகள்' என்ற நுால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. உலகம் முழுதும் ராமாயணம், மகாபாரதம்,கந்தபுராண கதைகளை சொல்லி, மக்களை நல்வழிப்படுத்திய ஞானப்பழத்தின் உயிர், 1993 நவம்பர், 7ல், அவரது, ௮௭வது வயதில்,லண்டனில் இருந்து நாடு திரும்பிய விமானத்திலேயே பிரிந்தது.சித்தமெல்லாம் சிவநெறியாய் வாழ்ந்த, 'திருமுருக' கிருபானந்த வாரியாரின் பிறந்த தினம் இன்று!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X