பெரிய ஸ்க்ரீன், ப்ளூடூத் காலிங்; பிட்ஷாட் க்ரிஸ்டல் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

Updated : ஆக 24, 2022 | Added : ஆக 24, 2022 | |
Advertisement
பிட்ஷாட் நிறுவனம் இந்திய சந்தையில் பெரிய ஸ்கிரீன் கொண்ட புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்திய ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட் சந்தையில் கடுமையான போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது புது வரவு சாதனங்களை வரிசை கட்டி அறிமுகம் செய்து வருகின்றன. ஸ்மார்ட்போன்களை விட புது புது கேட்ஜெட்களின் அறிமுகம் அதிகமாகி கொண்டிருக்கிறது. இந்த
DinamalarDotcom, Special, Technology, Smartphones&Gadgets, Smartwatch, FitshotCrystal, BluetoothCalling, தினமலர்டாட்காம், ஸ்பெஷல், டெக்னாலஜி, ஸ்மார்ட்போன்ஸ்&கேட்ஜெட்ஸ், ஸ்மார்ட்வாட்ச், பிட்ஷாட் க்ரிஸ்டல், ப்ளூடூத் காலிங்,

பிட்ஷாட் நிறுவனம் இந்திய சந்தையில் பெரிய ஸ்கிரீன் கொண்ட புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட் சந்தையில் கடுமையான போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது புது வரவு சாதனங்களை வரிசை கட்டி அறிமுகம் செய்து வருகின்றன. ஸ்மார்ட்போன்களை விட புது புது கேட்ஜெட்களின் அறிமுகம் அதிகமாகி கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் பிட்ஷாட் நிறுவனம் இந்திய சந்தையில் க்ரிஸ்டல் (Fitshot Crystal) என்ற பெரிய ஸ்கிரீன் கொண்ட புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



latest tamil news



இந்த ஸ்மார்ட்வாட்சில் அட்வான்ஸ்டு ப்ளூடூத் காலிங் மற்றும் சோலோசிங்க் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த ஒரு ஸ்மார்ட்போனுடனும் எளிதில் கனெக்ட் செய்துகொண்டு தெளிவான காலிங் வசதியை பெறலாம். அதுமட்டுமல்லாமல், இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் இன்பில்ட் ஸ்பீக்கர், மைக், ரேபிட் டயலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வாட்ச்-ஐ ஹவோபிட் (HaWoFit) என்ற அப்ளிக்கேஷன் மூலம் சின்க் செய்து பயன்படுத்தலாம்.



latest tamil news


Advertisement


இதன் டிஸ்ப்ளேவை பொருத்தவரை, 1.8 இன்ச் அமோல்ட் (AMOLED) காஸ்மிக் டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இதன் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ 70 சதவீதம் ஆகும். இதில் 368x448 பிக்சல் ரெசல்யூஷன், 100-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், 560 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. இதில் பெரிய சதுரங்க வடிவம் கொண்ட டயல் மற்றும் மற்ற கண்ட்ரோல்ஸ்களுக்காக பக்கவாட்டில் ரோட்டேடரி பட்டன் வழங்கப்பட்டுள்ளது.



latest tamil news



மேலும், க்ரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பில்ட்-இன் 24 மணி நேர இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டர், ஸ்லீப் டிராக்கர், ஸ்டெப் கவுண்ட்டர் என ஏராளமான ஆரோக்கியம் சார்ந்த 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன், வாய்ஸ் அசிஸ்டன்ஸ், ரிமோட் கேமரா ஷட்டர், ரிமோட் மியூசிக் பிளேயர் கண்ட்ரோல் மற்றும் ஃபைண்ட் ஃபோன், டூ நாட் டிஸ்டர்ப் மோட் போன்ற ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.



latest tamil news



ஸ்மார்ட்வாட்ச் முழுவதுமாக சார்ஜ் ஆக 120 நிமிடங்கள் ஆகும். இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு ஸ்டான்ட்-பை கிடைக்கும். இதுதவிர, இந்த ஸ்மார்ட்வாட்ச் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீட்டுடன் வருகிறது.


latest tamil news



இந்த பிட்ஷாட் க்ரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் கிரே, பிளாக் மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.2, 999 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட்டில் ஆகஸ்ட் 28ம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X