விருத்தகிரி ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை

Added : ஆக 24, 2022 | |
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் அடுத்த மு.பட்டி கிராமத்தில் 18.5 ஏக்கர் பரப்பளவில் விருத்தகிரி ஏரி உள்ளது. இதன் மூலம் மு.பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம விளைநிலங்கள் பாசனம் பெற்றன. ஏரி தண்ணீரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கும் பயன்படுத்தினர்.இந்நிலையில், தனிநபர்கள் சிலர், ஏரியை

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் அடுத்த மு.பட்டி கிராமத்தில் 18.5 ஏக்கர் பரப்பளவில் விருத்தகிரி ஏரி உள்ளது. இதன் மூலம் மு.பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம விளைநிலங்கள் பாசனம் பெற்றன. ஏரி தண்ணீரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கும் பயன்படுத்தினர்.இந்நிலையில், தனிநபர்கள் சிலர், ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் 18.5 ஏக்கர் பரபரளவு கொண்ட ஏரி, தற்போது 10 ஏக்கராக சுருங்கியுள்ளது. இதே நிலை நீடித்தால், நாளடைவில் ஏரி இருந்த சுவடு தெரியாமல் போகும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம், ஏரி ஆக்கிரமிப்பு குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக அப்போதைய தாசில்தார் சிவக்குமார் நேரில் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்த 6 பேரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, தனிநபர்கள் பிடியில் உள்ள விருத்தகிரி ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X