முக்கிய பதவிகளில் இந்தியர்கள்: அமெரிக்காவில் புதிய சாதனை

Updated : ஆக 24, 2022 | Added : ஆக 24, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
வாஷிங்டன் :அமெரிக்காவில், துணை அதிபர் முதல் மிக முக்கிய பதவிகளை, 130க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அலங்கரிக்கின்றனர். இது ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு, அரசில் முக்கிய பதவிகள் வழங்கப் படு கின்றன. ரொனால்டு ரீகன், 1981 - 1989ல் அதிபராக இருந்தபோது, முதல் முறையாக, இந்தியர் ஒருவர் அரசுப் பதவியில் நியமிக்கப்பட்டார்.பராக் ஒபாமா
முக்கிய பதவி  இந்தியர்கள்அமெரிக்காவில் புதிய சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன் :அமெரிக்காவில், துணை அதிபர் முதல் மிக முக்கிய பதவிகளை, 130க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அலங்கரிக்கின்றனர். இது ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு, அரசில் முக்கிய பதவிகள் வழங்கப் படு கின்றன. ரொனால்டு ரீகன், 1981 - 1989ல் அதிபராக இருந்தபோது, முதல் முறையாக, இந்தியர்
ஒருவர் அரசுப் பதவியில் நியமிக்கப்பட்டார்.பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது, 60 இந்திய அமெரிக்கர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன.


latest tamil newsஅவரைத் தொடர்ந்து, டொனால்டு டிரம்ப் பதவியேற்றபோது, 80க்கும் மேற்பட்ட முக்கிய பதவிகளில் இந்தியர்கள் இருந்தனர்.கடந்த, 2021ல் அமெரிக்க அதிபராக பதவியேற்ற
ஜோ பைடன் நிர்வாகத்தில், 130க்கும் மேற்பட்ட முக்கிய பதவிகளை இந்திய வம்சாவளியினர் அலங்கரிக்கின்றனர்.'இன்டியாஸ்போரா' என்ற அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் வெளிநாடு வாழ் இந்தியருக்கான அமைப்பு, அமெரிக்காவில் முக்கிய பதவிகளில் உள்ள இந்தியர்கள் குறித்த பட்டியலை தொகுத்துள்ளது.

அதன்படி, துணை அதிபர் கமலா ஹாரிசில் துவங்கி, அமெரிக்க நிர்வாகத்தின் அனைத்து முக்கிய துறைகளிலும் இந்தியர்கள் உள்ளனர்.''இது, சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் இந்தியர்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகும்,'' என, பிரபல தொழிலதிபரும், இன்டியாஸ்போரா அமைப்பின் தலைவருமான எம்.ஆர்.ரங்கசாமி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பார்லிமென்டில், மக்கள் பிரதிநிதிகள் சபையில், நான்கு இந்தியர்கள் உட்பட மாகாண, பிராந்திய அரசுகளில், 40 இந்திய அமெரிக்கர்கள் உள்ளனர். இதைத் தவிர, கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெள்ளா உட்பட, 20க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Singa Muthu - kottambatti,இந்தியா
25-ஆக-202206:32:05 IST Report Abuse
Singa Muthu கமலா ஹாரிஸ் எப்ப இந்தியர் ஆனாங்க? இந்திய வம்சாவளி என்று வென சொல்லலாம்.. கமலா கல்யாணம் பண்ணியது கிறிஸ்தவரை. ஹி ஹி ஹி அமெரிக்கா குடிமகன்களுக்கு மட்டுமே அரசாங்க பதவி.. இங்கே வெளிநாட்டினருக்கு பதவி கொடுத்திடுவீங்களா ? அது போல தான் அங்கேயும்
Rate this:
Cancel
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
25-ஆக-202205:10:58 IST Report Abuse
Mahesh Most of them are American citizens by birth and others are by immigration. America is an immigrant country, so people would have come from some country or other.
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
25-ஆக-202204:02:13 IST Report Abuse
கதிரழகன், SSLC இந்த பிராமணங்க எல்லாரும் அல்ப சம்பளத்துக்கு அரசு வேலை பாத்துகிட்டு சந்தோஷமா இருந்தாக. இந்த திரவிஷ கட்சி அவங்கள துரத்தி அடிச்சு விரட்டினாக. வெளிநாடு போனா அங்க இதுக்கு மேல சக்க போடு போடுறாக. நமக்கு நஷ்டம் அவனுக்கு லாபம்.
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
25-ஆக-202207:08:04 IST Report Abuse
vadiveluதமிழகம் மட்டுமே அவர்களுக்கான மாநிலம் இல்லையே, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அவர்களுக்கான ஆங்கீகாரம் இருக்கிறதே.அவர்கள் தமிழகத்தில் பிஞ்சு மனங்களிலும் வேண்டப்படாதவர்களாகவே சித்தரிக்க பட்டு வேண்டாத வன்மத்தை அரசியல் லாபத்திற்காக வளர்த்து விட்டார்கள். தங்களுக்கு ஒரு மூணு பேர் நமக்கு போட்டியாக இருப்பார்கள் என்று பயத்தை தாய் பாலுடன் சேர்த்து ஊட்டி விட்டவர்களுக்கு இருக்கிறார்கள்.அற்ப சம்பளத்திற்கு அரசு வெளி பார்த்தாலும், காசுக்கு பண பலத்துடன் இருப்பவர்களின் கட்டளைக்கு அடிமையாக இல்லாததால் திட்டமிட்து ஒதுக்க பட்டார்கள்.அந்த இடங்களுக்கு வேண்டிய இடத்தில கையெழுத்து போட வேண்டியவர்களை நியமிக்க ஆளும் / ஆண்ட அரசியல் கட்சிகளுக்கு சாதகமான கட்சி ஆட்களை நிரப்பினார்கள்.மேலும் அவர்கள் நல்ல படிப்பு படிக்க அதிக வாய்ப்புகள் ஏற்பட்டதால், பட்டன்களை பெற்று , சில தேர்வுக்ஸ்லில் தேர்வாகி அயல் நாடுகளுக்கும் சென்றார்கள்.திறமைக்கு ஏற்ற பணியும், ஊதியமும் பெற்று குடியுரிமையும் பெறுகிறார்கள்.இதில் நஷ்டம் யாருக்கும் இல்லை.ஆதியும் தடுக்கவும் சில கூட்டங்கள் அங்கேயும் நடக்கின்றன என்பது எத்தனை பேருக்கு தெரியும். இது சில நூறு வருடங்களாக நடக்கிறது, ஆனாலும் இறைவன் செயல் என்று இருக்கிறார்கள், அலட்டி கொள்வதில்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X