பாரம்பரிய நெல் சாகுபடி தொழில் நுட்ப கருத்தரங்கு| Dinamalar

பாரம்பரிய நெல் சாகுபடி தொழில் நுட்ப கருத்தரங்கு

Added : ஆக 24, 2022 | |
கள்ளக்குறிச்சி : உலகங்காத்தானில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த தொழில் நுட்ப கருத்தரங்கம் நடந்தது.ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்மற்றும் இயற்கை விவசாய சங்கம் சார்பில், நடந்த கருத்தரங்கிற்கு, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வேல்விழி தலைமை தாங்கினார். விவசாய சங்க கவுரவ தலைவர் தங்கவேல்,கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன்,
பாரம்பரிய நெல் சாகுபடி தொழில் நுட்ப கருத்தரங்கு

கள்ளக்குறிச்சி : உலகங்காத்தானில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த தொழில் நுட்ப கருத்தரங்கம் நடந்தது.



ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்மற்றும் இயற்கை விவசாய சங்கம் சார்பில், நடந்த கருத்தரங்கிற்கு, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வேல்விழி தலைமை தாங்கினார். விவசாய சங்க கவுரவ தலைவர் தங்கவேல்,கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், நுகர்வோர் சங்க செயலாளர் அருண் கென்னடி முன்னிலைவகித்தனர்.



இயற்கை விவசாயி வேலுமாலா வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர்கள், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய தலைவர் அசோகன், ஒருங்கிணைப்பாளர்ராஜி, செயற்குழு உறுப்பினர் நன்னிலம் உதயகுமார் நெல் சாகுபடி தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு கூறினர்.



தொடர்ந்து, இயற்கை விவசாயிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள்குறித்து விளக்கப்பட்டது.இதில், விவசாய சங்க நிர்வாகிகள் சுப்ரமணி, இளையராஜா, செந்தில், திருவேங்கடம், ராஜா,ஜெயவேல் உட்பட விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயி இளங்கோ நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X