மருந்து வணிகர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

Added : ஆக 24, 2022 | |
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரத்தில், தாலுகா மருந்து வணிகர் சங்கக் கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். பொருளாளர் முத்துக்கருப்பன், விழுப்புரம் மாவட்ட பொருளாளர் சவுந்தர்ராஜன், மருந்து வணிகர் அருணாசலம் முன்னிலை வகித்தனர். செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார்.கூட்டத்தில், சரக மருந்து ஆய்வாளர் கதிரவன் பேசுகையில், மருந்து வணிகர்கள்
மருந்து வணிகர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

சங்கராபுரம் : சங்கராபுரத்தில், தாலுகா மருந்து வணிகர் சங்கக் கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். பொருளாளர் முத்துக்கருப்பன், விழுப்புரம் மாவட்ட பொருளாளர் சவுந்தர்ராஜன், மருந்து வணிகர் அருணாசலம் முன்னிலை வகித்தனர். செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார்.கூட்டத்தில், சரக மருந்து ஆய்வாளர் கதிரவன் பேசுகையில், மருந்து வணிகர்கள் அரசின் போதை ஒழிப்புத் திட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். மருத்துவரின் முறையான மருந்து சீட்டு இல்லாமல் அதிவலி நிவாரணி மாத்திரை, துாக்க மாத்திரை, கரு கலைப்பு மாத்திரைகள் விற்கக் கூடாது.

இதற்கான கொள்முதல் விற்பனை இருப்பு விபரங்களை சரியாக பராமரிக்க வேண்டும். இதில் சிறிய தவறு இருந்தாலும் வணிகர்கள் தண்டிக்கப்படுவார்கள்' என்றார்.கூட்டத்தில், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மருந்து வணிகர்கள் அரசின் மருந்து வியாபார சட்ட திட்டத்திற்குட்பட்டு வியாபாரம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.துணைத் தலைவர் விஜய் ஆனந்த், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ உட்பட ஏராளமான மருந்து வணிகர்கள் பங்கேற்றனர்.பொருளாளர் துரை நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X