சங்கமம் கல்லூரியில் விழிப்புணர்வு பயிற்சி

Added : ஆக 24, 2022 | |
Advertisement
அவலுார்பேட்டை: அண்ணமங்கலம் சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு தொழில் முனைவு மற்றும் புத்தாக்கம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.அண்ணமங்கலம் சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அண்ணாமலை பல்கலைக்கழக கல்வி சார் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் நடந்த பயிற்சிக்கு, கல்லுாரி அறக்கட்டளை உறுப்பினர் அனுராக் தலைமை
சங்கமம் கல்லூரியில் விழிப்புணர்வு பயிற்சி

அவலுார்பேட்டை: அண்ணமங்கலம் சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு தொழில் முனைவு மற்றும் புத்தாக்கம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.

அண்ணமங்கலம் சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அண்ணாமலை பல்கலைக்கழக கல்வி சார் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் நடந்த பயிற்சிக்கு, கல்லுாரி அறக்கட்டளை உறுப்பினர் அனுராக் தலைமை தாங்கினார்.ஒருங்கிணைப்பாளர், வணிக நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியர் விவேக் வரவேற்றார். உதவி பேராசிரியை தனலட்சுமி அறிமுக உரையாற்றினார். கல்லுாரி முதல்வர் டாக்டர் ஹரிகுமார் சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழக பயிற்சி முகாம் கள ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் விளக்கவுரையாற்றினார்.

நியமிட்டா நிறுவன இயக்குனர் வெங்கடேஷ், விபாஎட் சர்வ் நிறுவன செயல் அலுவலர் சரவணபிரகாஷ் தொழில் முனைவோருக்கான நடைமுறை பயிற்சி வழங்கினர்.வணிக நிர்வாகவியல் துறை தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை உதவி பேராசிரியை ஜெயபிரதா செய்திருந்தார். பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X