மொபட்டில் வைத்த ரூ.1 லட்சம் 'அபேஸ்': சிதம்பரத்தில் பட்டப்பகலில் துணிகரம்

Added : ஆக 24, 2022 | |
Advertisement
சிதம்பரம் : சிதம்பரத்தில் பெண்ணை ஏமாற்றி, மொபட்டில் வைத்திருந்த 1 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சிதம்பரம், பொன்னம்பலம் நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் மனைவி கலாராணியுடன், சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள வங்கியில் நகையை அடகு வைத்து 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். அதை மொபட் சீட்டிற்கு கீழே பாதுகாப்பாக சண்முகம் பூட்டி வைத்தார்.பின்,

சிதம்பரம் : சிதம்பரத்தில் பெண்ணை ஏமாற்றி, மொபட்டில் வைத்திருந்த 1 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிதம்பரம், பொன்னம்பலம் நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் மனைவி கலாராணியுடன், சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள வங்கியில் நகையை அடகு வைத்து 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். அதை மொபட் சீட்டிற்கு கீழே பாதுகாப்பாக சண்முகம் பூட்டி வைத்தார்.பின், சண்முகம் சிதம்பரம் மேல வீதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார். கலாராணி மொபட் அருகே நின்றிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த இரண்டு நபர்கள் கலாராணியிடம் உங்கள் பணம் கீழே விழுந்துள்ளது என கூறினர். அதை நம்பிய கலாராணி கீழே குனிந்து பணத்தை எடுத்தபோது, கண் இமைக்கும் நேரத்தில் மொபட் சீட்டை உடைத்து அடியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து கலாராணி கொடுத்த புகாரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து, பைக் ஆசாமிகள் இருவரை தேடி வருகின்றனர். சிதம்பரம் மேலவீதியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X