ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி| Dinamalar

ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

Added : ஆக 25, 2022 | |
விருதுநகர்--வேளாண் இணை இயக்குனர் உத்தண்டராமன் செய்திக்குறிப்பு:விவசாயத்தில் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு அவர்களது திறனை மேம்படுத்தி உள்ளூரிலே வேலைவாய்ப்புகள் உருவாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு கழகம், உழவர் பயிற்சி நிலையம் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க உள்ளது.இதன் படி, 20 ஊரக இளைஞர்களுக்கு தரமான விதை உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப பயிற்சி



விருதுநகர்--வேளாண் இணை இயக்குனர் உத்தண்டராமன் செய்திக்குறிப்பு:விவசாயத்தில் ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு அவர்களது திறனை மேம்படுத்தி உள்ளூரிலே வேலைவாய்ப்புகள் உருவாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு கழகம், உழவர் பயிற்சி நிலையம் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க உள்ளது.இதன் படி, 20 ஊரக இளைஞர்களுக்கு தரமான விதை உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 40 வயதுடையவராகவும், கல்வி தகுதி 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலும் இருக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள், இணை இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொண்டு புதிய தொழில் முனைவேராக மாறிட வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X