குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தை மூடாததால் விபத்து அச்சத்தில் மக்கள்

Added : ஆக 25, 2022 | |
Advertisement
சிவகாசி--சிவகாசியில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் ஒரு வாரம் ஆகியும் மூடப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.சிவகாசி மேற்கு, தெற்கு, வடக்கு ரத வீதிகளில் மானுார் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு ரோடு தோண்டப்பட்டது. குழாய் பதிக்கும் பணி முடிந்தும் ரத வீதிகளில் ரோடு சீரமைக்கப்படவில்லை. இதனால்
குழாய் பதிக்க தோண்டிய  பள்ளத்தை மூடாததால் விபத்து அச்சத்தில் மக்கள்



சிவகாசி--சிவகாசியில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் ஒரு வாரம் ஆகியும் மூடப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.சிவகாசி மேற்கு, தெற்கு, வடக்கு ரத வீதிகளில் மானுார் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு ரோடு தோண்டப்பட்டது. குழாய் பதிக்கும் பணி முடிந்தும் ரத வீதிகளில் ரோடு சீரமைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகின்றது. காலை மாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. தவிர ரத வீதிகளில் ஒரு சில இடங்களில் குழாய் சோதனை செய்வதற்காக தோண்டப்பட்ட பள்ளம் ஒரு வாரம் ஆகியும் மூடவில்லை.இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது. மழை வேறு பெய்து விட்டால் ஒட்டுமொத்த ரோடும் சகதியாக மாறி விடுகின்றது. எனவே ரத வீதியில் தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக மூடுவதோடு, ரோட்டினையும் சீரமைக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X