பட்டா நிலத்தில் ரோடு இழப்பீடு கோரி வழக்கு : கலெக்டர் ஆஜர்

Added : ஆக 25, 2022 | |
Advertisement
மதுரை-விருதுநகர் மாவட்டம் அரசகுளத்தில் விவசாய பட்டா நிலத்தில் ரோடு அமைத்ததை அகற்றவும், இழப்பீடு கோரியும் தாக்கலான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கலெக்டர் ஆஜரானார்.காரியாட்டி அருகே அரசகுளம் காராளம், மும்மூர்த்தி தாக்கல் செய்த மனு:அரசகுளத்தில் எங்களுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதில் எங்களுக்கு சாதகமாக கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை

மதுரை-விருதுநகர் மாவட்டம் அரசகுளத்தில் விவசாய பட்டா நிலத்தில் ரோடு அமைத்ததை அகற்றவும், இழப்பீடு கோரியும் தாக்கலான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கலெக்டர் ஆஜரானார்.

காரியாட்டி அருகே அரசகுளம் காராளம், மும்மூர்த்தி தாக்கல் செய்த மனு:அரசகுளத்தில் எங்களுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதில் எங்களுக்கு சாதகமாக கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை பொருட்படுத்தாமல் நிலத்தில் அரசுத் தரப்பில் சட்டவிரோதமாக ரோடு அமைக்கப்பட்டது. இதனால் பயிர்கள் சேதமடைந்தன. இழப்பீடு வழங்கவும், அனுமதியின்றி அமைத்த ரோட்டை அகற்றவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. விருதுநகர் கலெக்டர் மேகநாத ரெட்டி ஆஜரானார்.அரசுத் தரப்பு: சம்பந்தப்பட்ட நிலம் நிலவியல் பாதை என ஆவணங்களில் உள்ளது. அதில் ரோடு அமைக்க கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரோடு அமைக்கப்பட்டது. மனுதாரர்களை தவிர வேறு யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. கீழமை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.கிராமத்தினர் சிலர் தரப்பில்,'பயிர்கள் சேதமடைந்ததற்காக மனுதாரர்களுக்கு இழப்பீடு வழங்கத் தயார்,' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள்: இவ்வழக்கில் எதிர்காலத்தில் கலெக்டர் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. விசாரணை செப்.,1 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X