பசுக்களை பாட்டிலால் குத்தி கொம்பை உடைத்து கொடூரம்

Added : ஆக 25, 2022 | |
Advertisement
மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே முன் விரோதம் காரணமாக, இரண்டு சினை பசுக்களின் கொம்பை உடைத்து, பாட்டிலால் பசுக்களின் உடலை கிழித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா விளநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்; கூலித் தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் அஜித்குமார், 21.மேய்ச்சலுக்காக களத்தில் இரண்டு சினை

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே முன் விரோதம் காரணமாக, இரண்டு சினை பசுக்களின் கொம்பை உடைத்து, பாட்டிலால் பசுக்களின் உடலை கிழித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா விளநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்; கூலித் தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் அஜித்குமார், 21.மேய்ச்சலுக்காக களத்தில் இரண்டு சினை பசுக்களை சீனிவாசன் கட்டி வைத்திருந்தார். ஏற்கனவே மாடுகள் கட்டுவதில் பிரச்னை இருந்த நிலையில், குடிபோதையில் சென்ற அஜித்குமார் மது பாட்டில்களால் ஒரு பசுவின் கொம்பில் தாக்கியுள்ளார்.
இதில் அந்த பசுவின் கொம்பு உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. ஆத்திரம் அடங்காத அந்த இளைஞர், உடைந்த மது பாட்டிலால் இரண்டு பசுக்களின் உடலில் கிழித்து காயம் ஏற்படுத்தி உள்ளார்.மாடுகளின் அலறல் சத்தம் கேட்டு சீனிவாசன் குடும்பத்தினர் ஓடி சென்று பார்த்த போது அஜித்குமார் தப்பி ஓடியுள்ளார். பசுவை மீட்ட சீனிவாசன் குடும்பத்தினர் மாடுகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். இதுகுறித்த புகாரின்படி, செம்பனார் கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X