200 வீடுகளுக்கு தலா 3 தென்னங்கன்றுகள்

Added : ஆக 25, 2022 | |
Advertisement
வேடசந்தூர் -வேடசந்துார் ஒன்றியத்தில் ஆறு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு வீடு தோறும் 3 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டு வருவதாக வேளாண்மை உதவி இயக்குனர் சின்னச்சாமி தெரிவித்தார். தமிழக அரசு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு ஊராட்சிக்கு 200 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மூன்று தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு



வேடசந்தூர் -வேடசந்துார் ஒன்றியத்தில் ஆறு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு வீடு தோறும் 3 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டு வருவதாக வேளாண்மை உதவி இயக்குனர் சின்னச்சாமி தெரிவித்தார். தமிழக அரசு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு ஊராட்சிக்கு 200 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மூன்று தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. வேடசந்துார் ஒன்றியத்தில் கல்வார்பட்டி, நாகம்பட்டி, கோவிலுார், பாலப்பட்டி, நாகை கோட்டை, தட்டாரப்பட்டி என ஆறு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, நெட்டை மர தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. வேளாண்மை உதவி இயக்குனர் சின்னசாமி கூறியதாவது: மூன்றுக்கு மூன்று அடி என்ற அளவில் பள்ளம் தோண்டி மணல், மக்கிய குப்பை, செம்மண் கொட்டி தென்னங்கன்றை நட்டு தண்ணீர் விட வேண்டும். மறுநாள் குழியை சுற்றி லேசாக காலால் மிதித்து விட்டு தண்ணீர் விட்டால் போதுமானது. தென்னங்கன்றை சுற்றி பச்சை வலையும் கட்ட வேண்டும்,என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X