ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுபள்ளி முன் மக்கள் போராட்டம்

Added : ஆக 25, 2022 | |
Advertisement
கிருஷ்ணகிரி:எலத்தகிரி அரசு உதவி பெறும் பள்ளியில், ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி,- கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த எலத்தகிரியில், அரசு உதவி பெறும் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது; 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.கடந்த, மூன்று மாதங்களுக்கு முன் முதுகலை விலங்கியல் ஆசிரியர் ஓய்வு
ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுபள்ளி முன் மக்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி:எலத்தகிரி அரசு உதவி பெறும் பள்ளியில், ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி,- கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த எலத்தகிரியில், அரசு உதவி பெறும் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது; 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

கடந்த, மூன்று மாதங்களுக்கு முன் முதுகலை விலங்கியல் ஆசிரியர் ஓய்வு பெற்றார். அந்த பணியிடத்திற்கு கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 19 வருடங்களாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் அடைக்கலராஜ் என்பவர் தேர்வு செய்யப்படலாம் எனஎதிர்பார்த்தனர்.

அதற்கான உறுதியை கிருஷ்ணகிரி, தர்மபுரி ஒருங்கிணைந்த மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் அளித்திருந்த நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த அருளானந்தம் என்பவரை பரிந்துரைத்ததால், எலத்தகிரி பகுதி மக்கள் விரக்திஅடைந்தனர்.இதையடுத்து, பள்ளிக்கு அருகிலுள்ள இடத்தில் கூடாரம் அமைத்து, எலத்தகிரி பொதுமக்கள் போராட்டத்தை துவக்கிஉள்ளனர்.போலீசார் பேச்சு நடத்தியும், பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை; தொடர்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X