மாநில ஓபன் தடகள சாம்பியன்ஷிப்எஸ்.டி.ஏ.டி., ஒட்டு மொத்த சாம்பியன்| Dinamalar

மாநில ஓபன் தடகள சாம்பியன்ஷிப்எஸ்.டி.ஏ.டி., ஒட்டு மொத்த சாம்பியன்

Added : ஆக 25, 2022 | |
சென்னை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், எஸ்.டி.ஏ.டி., அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் சார்பில், 35வது மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், கிருஷ்ணகிரியில் சமீபத்தில் நடந்தன.இப்போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,
மாநில ஓபன் தடகள சாம்பியன்ஷிப்எஸ்.டி.ஏ.டி., ஒட்டு மொத்த சாம்பியன்



சென்னை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், எஸ்.டி.ஏ.டி., அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் சார்பில், 35வது மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், கிருஷ்ணகிரியில் சமீபத்தில் நடந்தன.இப்போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட தமிழகம் முழுதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து மொத்தம், 5,௦௦௦ வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.இதில், 14, 16, 18 மற்றும் 20 வயதுடைய நான்கு பிரிவுகளில், 100 மீ., மற்றும் 200 மீ., துவங்கி, 5,000 மீ., மற்றும் 10 ஆயிரம் மீ., வரை ஓட்டப்பந்தய போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோல் மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் மற்றும் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட தடகளத்தின் அனைத்து போட்டிகளும் நடத்தப்பட்டன.அனைத்து போட்டிகளின் முடிவில், 481 புள்ளிகள் பெற்று, எஸ்.டி.ஏ.டி., அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அடுத்தடுத்த இடங்களை, 346 புள்ளிகளில் பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமியும், 135 புள்ளிகளில் திருவள்ளூர் மாவட்ட தடகள சங்க அணியும் கைப்பற்றின.தொடர்ந்து மூன்றாவது முறையாக திருவள்ளூர் அணி, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இப்போட்டியில் வெற்ற பெற்ற வீரர், வீராங்கனையர் ஆந்திரா மாநிலம், குண்டூரில் நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X