ஸ்ரீராம் பள்ளி சார்பில்யோகா உலக சாதனை| Dinamalar

ஸ்ரீராம் பள்ளி சார்பில்யோகா உலக சாதனை

Added : ஆக 25, 2022 | |
திருநீர்மலை, கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள் ௪௪ பேர், கண்களை கட்டிக் கொண்டு, 30 நிமிடங்களில் 27 யோகாசனங்கள் செய்து உலக சாதனை படைத்துள்ளனர். பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் உள்ள ஸ்ரீராம் பள்ளியில், கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பயிற்சியாளர் பசுபதி உலக சாதனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.இதில், பள்ளி
ஸ்ரீராம் பள்ளி சார்பில்யோகா உலக சாதனை



திருநீர்மலை, கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள் ௪௪ பேர், கண்களை கட்டிக் கொண்டு, 30 நிமிடங்களில் 27 யோகாசனங்கள் செய்து உலக சாதனை படைத்துள்ளனர். பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் உள்ள ஸ்ரீராம் பள்ளியில், கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பயிற்சியாளர் பசுபதி உலக சாதனை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.இதில், பள்ளி மாணவ - மாணவியர் ௪௪ பேர் கண்ணை கட்டிக் கொண்டு, ௩௦ நிமிடங்களில், 27 யோகாசனங்களை செய்து காட்டினர். இதை உலக சாதனையாக 'நோபல் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்' அங்கீகரித்து உள்ளது.இந்த சாதனையை, மாநில இயக்குனர் ஜெயகுமார் அங்கீகரித்து, சாதனை படைத்த 44மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.சங்கர் நகர் இன்ஸ்பெக்டர் ஆல்பின் ராஜ் தலைமை ஏற்றார். பள்ளி முதல்வர் ராதா பத்மநாபன் உள்ளிட்டோர் விருது மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X