தீக்குளித்த மனைவியை காப்பாற்ற முயன்றவர் படுகாயம்| Dinamalar

தீக்குளித்த மனைவியை காப்பாற்ற முயன்றவர் படுகாயம்

Added : ஆக 25, 2022 | |
தேனாம்பேட்டை, குடும்ப பிரச்னையில் தீக்குளித்த மனைவியை காப்பாற்ற முயற்சித்த கணவரும் கருகினார்.தேனாம்பேட்டை, காமராஜர் சாலையைச் சேர்ந்தவர், ஹரி, 37. ஹோட்டல் பணியாளர். இவரது மனைவி லீலாவதி, 30. இவர்களுக்கு, திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இருவருக்கும் இடையே, குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது. நேற்று முன் தினம் இரவு நடந்த தகராறில் விரக்தியடைந்த



தேனாம்பேட்டை, குடும்ப பிரச்னையில் தீக்குளித்த மனைவியை காப்பாற்ற முயற்சித்த கணவரும் கருகினார்.தேனாம்பேட்டை, காமராஜர் சாலையைச் சேர்ந்தவர், ஹரி, 37. ஹோட்டல் பணியாளர். இவரது மனைவி லீலாவதி, 30. இவர்களுக்கு, திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இருவருக்கும் இடையே, குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது. நேற்று முன் தினம் இரவு நடந்த தகராறில் விரக்தியடைந்த லீலாவதி, மண்ணெண்ணயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதை பார்த்த ஹரி உடனடியாக, அவரை காப்பாற்ற முயற்சித்தார். இதில் அவரும் பலத்த தீக்காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தேனாம்பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X