இலவச உணவு தொகுப்பு இடுக்கியில் வினியோகம் துவக்கம்

Added : ஆக 25, 2022 | |
Advertisement
மூணாறு--இடுக்கி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடை மூலம் அனைவருக்கும் இலவச உணவு தொகுப்பு வினியோகம் நேற்று முதல் துவங்கியது.கேரளாவில் ஓணப்பண்டிகையின்போது அனைவருக்கும் இலவசமாக உணவு பொருட்கள் தொகுப்பினை அரசு வழங்கி வருகிறது. இந்தாண்டு செப்.8ல் ஓணம் கொண்டாடப் படுவதால் வழக்கம்போல் இலவச உணவு தொகுப்பு வழங்கப் படுகிறது. இதில் ரூ.447 மதிப்பில் சீனி, பருப்பு,



மூணாறு--இடுக்கி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடை மூலம் அனைவருக்கும் இலவச உணவு தொகுப்பு வினியோகம் நேற்று முதல் துவங்கியது.

கேரளாவில் ஓணப்பண்டிகையின்போது அனைவருக்கும் இலவசமாக உணவு பொருட்கள் தொகுப்பினை அரசு வழங்கி வருகிறது. இந்தாண்டு செப்.8ல் ஓணம் கொண்டாடப் படுவதால் வழக்கம்போல் இலவச உணவு தொகுப்பு வழங்கப் படுகிறது. இதில் ரூ.447 மதிப்பில் சீனி, பருப்பு, தேயிலை, வத்தல் பொடி, மஞ்சள்பொடி, நெய், முந்திரி பருப்பு உள்பட 13 வகை பொருட்கள் உள்ளன. அதன் மொத்த எடை 4.3 கிலோ ஆகும்.

இடுக்கி மாவட்டத்தில் நேற்று முதல் உணவு தொகுப்பு வினியோகம் துவங்கியது. நேற்று மஞ்சள் நிற கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் இன்றும் அதே நிற கார்டு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆக. 25,26,27 ம் தேதிகளில் பிங் நிற கார்டுகளுக்கும், ஆக. 29, 30, 31ம் தேதிகளில் நீல நிற கார்டுகளுக்கும், செப்.1,2,3 ஆகிய தேதிகளில் வெள்ளை நிற கார்டுகளிக்கும் பொருட்கள் வழங்கப்படுகிறது.அந்த நாட்களில் பொருட்களை வாங்க இயலாதவர்கள் செப்.4,5,6,7 ஆகிய தேதிகளில் பெறலாம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X