ஸ்ரீ ஐயப்பா பள்ளியில் விளையாட்டு விழா| Dinamalar

ஸ்ரீ ஐயப்பா பள்ளியில் விளையாட்டு விழா

Added : ஆக 25, 2022 | |
சோழிங்கநல்லுார், ஸ்ரீ ஐயப்பா மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளியின் 26வது விளையாட்டு தின விழா மற்றும் 76வது சுதந்திர தின விழா சமீபத்தில் நடந்தது.சிறப்பு விருந்தினர்களாக செம்மஞ்சேரி சரக காவல் ஆணையாளர் ரியாசுதீன், ஜெயின் கல்லுாரி முதல்வர் முருகேசன், செம்மஞ்சேரி இன்ஸ்பெக்டர் வி.சீனிவாசன் மற்றும் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை துறை தலைவர்
ஸ்ரீ ஐயப்பா பள்ளியில் விளையாட்டு விழா



சோழிங்கநல்லுார், ஸ்ரீ ஐயப்பா மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளியின் 26வது விளையாட்டு தின விழா மற்றும் 76வது சுதந்திர தின விழா சமீபத்தில் நடந்தது.சிறப்பு விருந்தினர்களாக செம்மஞ்சேரி சரக காவல் ஆணையாளர் ரியாசுதீன், ஜெயின் கல்லுாரி முதல்வர் முருகேசன், செம்மஞ்சேரி இன்ஸ்பெக்டர் வி.சீனிவாசன் மற்றும் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை துறை தலைவர் பி.கே.செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.பள்ளி தாளாளர் வெங்கடேசன் மற்றும் இயக்குனர் நந்தினி வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை கவுரவப்படுத்தினர்.பின்னர் சிலம்பம், யோகா, வாள் வீச்சு, பிரமிட், மழலையர் நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இதன் பின்னர் மாணவியருக்கு காவல் ஆணையாளர் ரியாசுதீன் மற்றும் ஜெயின் கல்லுாரி முதல்வர் முருகேசன் ஆகியோர் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினர்.இறுதியாக பள்ளியின் மூத்த முதல்வர் சீனிவாசன் நன்றி கூறி, விழாவை நிறைவு செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X