அவசர கதியில் கான்கிரீட்'கேட்'டுகள் சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி

Added : ஆக 25, 2022 | |
Advertisement
கடலுார்:கடலுாரில் மூட முடியாதபடி கான்கிரீட் போடப்பட்ட அரசு அலுவலக 'கேட்'டுகள் நம் நாளிதழ் செய்தி எதிரொலி காரணமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடலுார் பழைய கலெக்டர் அலுவலக பின்புற நுழைவு கேட் பகுதியில் உயரமாக வடிகால் அமைக்கப்பட்டதால், கேட்டை சேர்த்து கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. இதுபோல, நெல்லிக்குப்பம் சாலை செம்மண்டலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம்
அவசர கதியில் கான்கிரீட்'கேட்'டுகள் சீரமைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலி

கடலுார்:கடலுாரில் மூட முடியாதபடி கான்கிரீட் போடப்பட்ட அரசு அலுவலக 'கேட்'டுகள் நம் நாளிதழ் செய்தி எதிரொலி காரணமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடலுார் பழைய கலெக்டர் அலுவலக பின்புற நுழைவு கேட் பகுதியில் உயரமாக வடிகால் அமைக்கப்பட்டதால், கேட்டை சேர்த்து கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. இதுபோல, நெல்லிக்குப்பம் சாலை செம்மண்டலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு உயரமாக வடிகால் அமைக்கப்பட்டதால், நுழைவாயில் கேட்டுடன் சேர்த்து கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.

இரு இடங்களிலும் கேட் மூட முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால், இரு இடங்களிலும் கேட் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X