பருவ மழைக்கு முன் நீர்நிலைகளை துார்வாரிதடுப்பு நடவடிக்கை எடுக்க அரசு முன்வருமா?

Added : ஆக 25, 2022 | |
Advertisement
அண்ணா நகர், பருவ மழை துவங்கவுள்ள நிலையில், அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட கூவம், நல்லான் கால்வாய் உள்ளிட்ட நீர் வழித்தடங்களை துார்வாரி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.சென்னையில் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய்கள் முக்கிய நீர்வழித்தடங்களாக உள்ளன. இவற்றில் இணையும் முக்கிய கால்வாய்களில், விருகம்பாக்கம் கால்வாயும்
பருவ மழைக்கு முன் நீர்நிலைகளை துார்வாரிதடுப்பு நடவடிக்கை எடுக்க அரசு முன்வருமா?



அண்ணா நகர், பருவ மழை துவங்கவுள்ள நிலையில், அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட கூவம், நல்லான் கால்வாய் உள்ளிட்ட நீர் வழித்தடங்களை துார்வாரி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.சென்னையில் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய்கள் முக்கிய நீர்வழித்தடங்களாக உள்ளன. இவற்றில் இணையும் முக்கிய கால்வாய்களில், விருகம்பாக்கம் கால்வாயும் ஒன்று.அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட, 108வது வார்டில், சூளைமேடு அருகில், விருகம்பாக்கம் கால்வாய் செல்கிறது. நெற்குன்றத்தில் துவங்கும் இக்கால்வாய், அரும்பாக்கம், சூளைமேடு வழியாக சென்று, அமைந்தகரை கூவத்தில் கலக்கிறது.கடந்த பருவ மழையின் போது, இக்கால்வாய் நிரம்பி வழிந்தது. அப்போது, அப்பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.இக்கால்வாயை முறையாக சீரமைக்காததால், கால்வாய் முழுவதும், மதுபாட்டில்கள் , 'பிளாஸ்டிக்' மற்றும் குப்பை கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கண்துடைப்புக்கு கொசு மருந்து அடித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும், இப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேம்பாலத்தின் கீழ்பகுதியில், நீரோட்டம் தடைப்பட்டு, கழிவுநீர் தேங்கி உள்ளது. கால்வாயை ஒட்டியுள்ள பாரி தெரு, கண்ணகி தெருவில் குடியிருப்போர், நோய் பரவும் பீதியில் உள்ளனர். சென்னையில் பரவலாக மழை பெய்ய துவங்கியுள்ளது. ஆனால், கால்வாய்கள் துார்வாருதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் இன்னும் துவங்கப்படவில்லை. இதேபோல், அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட வில்லிவாக்கம் டி.வி.எஸ்.,கால்வாய், அமைந்தகரை கூவம், அபீசஸ் காலனி கால்வாய், ஐ.சி.எப்., - நல்லான் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்களும் கவனிக்கப்படாமல் உள்ளன. இந்த நீர்நிலைகளை பருவ மழைக்கு முன், முறையாக சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X