மார்க்கையன்கோட்டை இரு வழிப்பாலமாக மாற்ற ஆய்வு

Added : ஆக 25, 2022 | |
Advertisement
சின்னமனுார்- -மார்க்கையன்கோட்டை முல்லைப் பெரியாற்று பாலத்தை இரு வழிப் பாலமாக மாற்ற நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.சின்னமனுாரிலிருந்து மார்க்கையன்கோட்டை செல்லும் ரோட்டில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. பழைய பாலம் பயன்பாடற்று மூடி வைக்கப்பட்டுள்ளது. புதிய பாலத்திற்கும், பழைய பாலத்திற்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது.



சின்னமனுார்- -மார்க்கையன்கோட்டை முல்லைப் பெரியாற்று பாலத்தை இரு வழிப் பாலமாக மாற்ற நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.சின்னமனுாரிலிருந்து மார்க்கையன்கோட்டை செல்லும் ரோட்டில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. பழைய பாலம் பயன்பாடற்று மூடி வைக்கப்பட்டுள்ளது. புதிய பாலத்திற்கும், பழைய பாலத்திற்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. கடந்த வாரம் பாலத்தில் வேகமாக வந்த கார் அந்த இடைவெளி வழியாக முல்லைப் பெரியாற்றுக்குள் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. பழைய பாலத்தை பராமரிப்பு செய்து, இருவழிப்பாலமாக பயன்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்தமபாளையத்தில் புதிய பாலம் கட்டிய போது, பழைய பாலத்தையும் பயன்படுத்தப்பட்டது. அதேபோன்று மார்க்கையன்கோட்டை பழைய பாலத்தை பராமரிப்பு செய்து இருவழிப்பாதையாக பயன்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் குமணன் தலைமையில் நெடுஞ்சாலைத் துறையினர் பழைய பாலத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X